வடமராட்சி பிரதேச கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நேரில் சென்று களஆய்வு!

Friday, June 4th, 2021

பொலிகண்டி மேற்கு கடற்றொழிலாளர் சங்கத்தின் அழைப்பினையேற்று, குறித்த பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேச கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

குறித்த பிரதேசத்தில், சுமார் 50 படகுகள் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இறங்கு துறை ஒன்றினை அமைத்து தருமாறு குறித்த சந்திப்பின்போது கடற்றொழிராளர்கள் கோரிக்கை முன்வைத்தனர்

அதேவேளை பொலிகண்டி கிழக்கு நங்கூரமிடும் தளத்தினை ஆழப்படுத்தி தருமாறு, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பொலிகண்டி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இதனிடையே பொலிகண்டிப் பிரதேசத்தில் கைவிடப்பட்டுள்ள ஐஸ் தொழிற்சாலையை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் அதனை புனரமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் பருத்தித்துறை கொட்டடி கடற்றொழிலாளர் இறங்குதுறை பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிடம் பிரதேச கடற்றொழிலாளர்கள் தங்களுடைய எதிர்பார்ப்புக்களை தெரிவித்தனர்.

குறிப்பாக, தமது தொழில் நடவடிக்கைகளுக்கு பாதகமாக காணப்படும், கரையிலிருந்து கடலுக்கு படகுகளை கொண்டு செல்லும் பகுதியை(வான்) புனரமைத்து தருமாறு  கோரிக்கை முன்வைத்தனர்.

இந்நிலையில் வடமாராட்சி பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல், வடமாராட்சி பிரதேச சங்க பிரதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இடையில் நடைபெற்றுள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: