கல்வியியலாளர் சேவை பதவியுயர்வுக்கு தமிழ், முஸ்லிம்கள் தகுதியற்றவர்களா – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, May 4th, 2017

இலங்கை கல்வியியலாளர் சேவை தரம் 2 ii இலிருந்து தரம் 2 இக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு 2015ஆம் ஆண்டு விண்ணப்பம் கோரப்பட்டு, முன்னைய சேவை பிரமாணக் குறிப்பிற்கு அமைய 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 44 வெற்றிடங்களுக்கென நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டதாகவும், இதில், தமிழ் மொழி மூல தேசிய கல்விக் கல்லூரிகளான யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, தர்கா நகர், அட்டாளைச்சேனை, கொட்டகல ஆகிய கல்விக் கல்லூரிகளிலிருந்து விரிவுரையாளர்கள் தோற்றியிருந்தனர் என்றும், எனினும், மேற்படி பதவி உயர்வு வழங்கப்பட்டோர் பட்டியலில் தமிழ் மொழி மூல விரிவுரையாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வரும் நிலையில்,

மேற்படி பதவி உயர்வு தொடர்பில் தமிழ் மொழி மூல உத்தியோகத்தர்கள் புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்குமாறும், அவ்வாறு இடம்பெற்றிருப்பின் அதற்கான காரணம் என்ன என்பதை தெளிவுபடுத்தமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (04) நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts:

பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெடுந்தீவு கடலில் கைதான கடற்றொழிலாளர்களை விடுவிக்க முயற்சி – டக்ளஸ் எம...
அடைய முடியாத இலக்கை விடுத்து இணக்க அரசியலுடன் கைகோருங்கள்: பருத்திதுறையில் அமைச்சர் டக்ளஸ் அறைகூவல்!

புதிய அரசியலமைப்பு 13ஆம் திருத்த த்தைவிடவும் மேம்பட்ட தாக அமைந்தால் வரவேற்போம்-  செயலாளர் நாயகம் டக்...
தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் சர்வ கட்சி பொது வேலைத்திட்டத்தில் தீர்வு வேண்டும் - ஜனாதிபத...
வடக்கின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!