தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெடுந்தீவு கடலில் கைதான கடற்றொழிலாளர்களை விடுவிக்க முயற்சி – டக்ளஸ் எம்பி தெரிவலிப்பு!

Monday, October 21st, 2019

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய கடலோர படையினரால் கைதுசெய்யப்பட்ட 18  யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட இந்தியச் சிறைகளில் இருக்கும் கடற்றொழிலாளர்களது விடுதலையை வரவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரஷ்பர நல்லிணக்க அடிப்படையில் மேற்கொள்ள முயற்சிகளை தாம் மேற்கொண்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 3 ஆம் திகதி நெடுந்தீவு கடலில் எல்லைதாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளை இந்தியக் கடற்படையினரால் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 18 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களது விடுதலை தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் குறித்த கடற்றொழிலாளர்களது உறவுகள் கோரிக்கை விடுத்தனர். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றையதினம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த குறித்த கடற்றொழிலாளர்களது உறவுகள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது பிரச்சிரைனகள் தொடர்பில் தெரிவித்திருந்ததுடன் தமது குடும்ப வாழ்வாதாரத்தை மன்னெடுத்தச் சென்ற குறித்த கடற்றொழிலாளர்கள் இந்தியச் சிறைகளில் இருப்பதால் தாம் குடும்பத்தை கொண்டு செல்வதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களது வரவு தான் தமது வாழ்க்கையின் மீள் மலர்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்த அவர்கள் விரைவாக தமது உறவுகளின் விடுதலைக்கு நடவடிக்கை மேற்கொண்டு தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது குறித்த உறவுகளுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்தக்கொண்ட செயலாளர் நாயகம் இலங்கையிலுள்ள இந்திய தூதுவருடனும் தமிழ் நாட்டிலுள்ள இலங்கைக்கான துணைத் தூதுவருடனும் தாம் தொடர்புகளை ஏற்படுத்தி குறித்த பிரச்சினை தொடர்பில் பேசியுள்ளதாகவும். இதன்போது வரவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரஷ்பர புரிந்துணர்வு இடிப்படையில் இரு நாட்டு சிறைகளில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தாம் அவர்களிடம் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே மருதங்கேணி பிரதேச மக்கள் பிரதிநிதிகள் ஒருதொகுதியினர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளவுள்ள பிரசார நடவடிக்கைகளை தமது பகுதிகளில் முன்னெடுப்பது  தொடர்பில் ஆலோசனை ஆராய்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


உணர்வுகளைப் பரிமாறிக்கொ ள்ளும் சூழலை ஏற்படுத்து வதாகவே பல்கலைக்கழகங்களின் நிர்வாக கட்டமைப்புக்கள் உர...
வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பி க்கும் எந்தத் ...
'நமது வீட்டுத் தோட்டத்தில் ஆரம்பிப்போம்!' தேசிய செயற்றிட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கிளிநொச...