வடக்கின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Monday, March 18th, 2024

உள்ளூர் ரின்மீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். .

இச்சந்திப்பின்போது ரின்மீன் உற்பத்தியை உள்ளூரில் செய்கின்றவர்களுக்கு சந்தையில் நிலையான விலையை தீர்மானிக்க முடியாதிருப்பதாகவும் , ரின் மீன் இறக்குமதி செய்வதால் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர். 

இச்சந்திப்பின்போது அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை

யாழ்ப்பாணம் கடற்றொழில் சங்க சம்மேளனத்தின் நிர்வாகப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்று சந்தித்தனர். 

கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது  கடலட்டை பிடிப்பு தொடர்பாக அனுமதி சார்ந்த விடயங்கள் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலின்போது அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்பதாக

வடமாகாண கடமை நிறைவேற்று அதிபர்களின் சங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்திருந்தனர்.

இன்று கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில் கடமை நிறைவேற்று அதிபர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் பிரச்சனைகள் தொடர்பாக அமைச்சருடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மருந்து வகைகளின் விலைகளைக் கட்டப்படுத்துகின்ற பொறிமுறையை அறிமுக...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மீன்பிடி படகுகளுக்கு 2 ஆம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம...
அனைத்து விடுதலை அமைப்புக்களையும் ஒன்றிணைக்க கடும் பிரயத்தனம் மேற்கொண்டேன் - தேசத்தை கட்டியெழுப்ப அனை...

கற்பனை இராச்சியங்களை காட்டியவர்கள் மக்களை நடுத்தெருவில் கைவிட்டுள்ளார்கள் - செயலாளர் நாயகம் தெரிவிப்...
அரசியல் அதிகாரங்கள் எம்மிடம் இருந்தபோது மக்களுக்காக நாம் சாதித்துக் காட்டியவை ஏராளம் – ஊடக சந்திப்பி...
பருத்தித்துறை, குருநகர், பேசாலை, பலப்பிட்டிய மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதற்கு இந்தியாவுடன் புரிந்...