வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கடற்னொழில் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்ற தமக்கு, நிரந்தர நியமனத்தைப் பெற்றுத் தருமாறு இதன்போது அமைச்சரிடம் குறித்த ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதுதொடர்பாக தன்னால் ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்னும் சில மாதங்கள் பொறுத்திருக்குமாறும், அமைச்சரவை பத்திரம் ஒன்றின் ஊடாக தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தரப்படும் எனவும் தெரிவித்தார்.- 23.01.2023
Related posts:
கடற்தொழில் சார்ந்த கற்கை நெறிக்கு பல்கலையில் தனியான பீடம் அமைக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக...
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் க...
சர்வதேச கடல் மற்றும் ஆழ்கடல் கடற்றொழிலை மேலும் ஊக்குவிப்பதற்கு தேசிய நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும் – ...
|
|