வடக்கு குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்கு திகதி மாற்றம் – அமைச்சர் டக்ளஸின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை!

Thursday, April 22nd, 2021



வடக்கு மாகாண குடும்ப நல உத்தியோகஸ்தர்களுக்கான கருந்தரங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய திகதி மாற்றம் செய்யப்படவுள்ளது.

வடமாகாண சுகாதார பணிமனையினால் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 26 ஆம் திகதி இந்துக்களின் விரத நாள்களில் ஒன்றான தாயை இழந்தவர்கள் அனுஸ்டிக்கும் சித்திராப் பௌர்ணமி தினமான 26 ஆம் திகதி, குறித்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையினால் ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு பாதிக்கப்பட்டவர்களினால் கொண்டுவரப்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட கடற்றொழில் அமைச்சர், பாதிக்கப்பட்டோர் தொடர்பான தனது கரிசனையை வெளிப்படுத்தியதுடன் கருத்தரங்கை வேறு தினத்திற்கு மாற்றுவது தொடர்பான தன்னுடைய ஆலோசனையையும் வழங்கினார்.

இந்நிலையில், சித்திரா பௌர்ணமி விரதம் அனுஸ்டிப்போருக்கு அசௌகரியம் ஏற்டாத வகையில் பிறிதொரு தினத்திற்கு குறித்த கருத்தரங்கை மாற்றுவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இலங்கையின் மிக உயரமான மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் சிற்பத் தேர் கட்டுமாணங்களை செயலாளர் நாயகம் ட...
திலீபன் உட்பட புலித் தலைவர்களின் உறவினர்கள் அவர்களை நினைவு கூருவதற்கான உரிமையை மதிக்கின்றேன் - அமைச்...
வடமாராட்சி கிழக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் விவசாய செயற்பாடுகளுக்கான அனுமதியைப் பெற்றுத் ...