ஊடகங்கள் மீதான அராஜகங்கள் அனைத்துக்குமான பழி ஈ.பி.டி.பி. மீது சுமத்தப்பட்டது. – மூத்த ஊடகவியலாளர் ஒப்புதல் வாக்குமூலம்!

Wednesday, September 1st, 2021

‘செல்லும் செல்லாத அனைத்துக்கும் செட்டியார் தலை’ என்பது போன்று, கடந்த காலங்ளில் தமிழ் ஊடகங்கள் மீது  மேற்கொள்ளப்பட்ட அனைத்து  அராஜகங்களுக்கும் பழி சுமத்தப்படும் நிலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆளானதாக மூத்த ஊடகவியலாளர் ந. வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த கால சம்வங்களை மீட்கும் வகையில் சிரேஸ்ட ஊடகவியலாளரினால் காலைக்கதிர் பத்திரிகையில், எழுதப்பட்டு வருகின்ற வரலாற்று தொடரிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 களின் நடுப் பகுதியில் செயற்பட்டு வந்த விடுதலைப் போராட்ட இயக்கங்ளின் மத்தியில் வசீகரமான  இராணுவத் தளபதியாக வலம் வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அக்கால கட்டத்தில் யாழ். குடா நாட்டில் இருந்து வெளியாகிய பத்திரிகைகளை பாதுகாப்பதற்காக மேற்கொண்ட  துணிச்சலான நடவடிக்கையையும் குறித்த தொடரில் ஊடகவியலாளர் வித்தியாதரன் பதிவு செய்துள்ளார்.

மேலும், அக்காலத்தில் பிராந்தியப் பத்திரிகைகளை பாதுகாப்பதற்காக தீர்க்கரிசனத்துடன் செயற்பட்ட தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது பிற்பட்ட காலத்தில், ஊடகங்கள் மீது நடத்தப்பட்ட அராஜகங்கள் அனைத்துக்குமான பழியை சுமத்தும் நிலைக்கு ஆளானதாகவும் தன்னுடைய ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய பிறந்த நாள் நிகழ்வில், புலிகளின் காலத்தில் தம்மால் மேற்கொள்ளப்பட்ட சில செயற்பாடுகள் தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக தெரிவித்து, சில உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர் வித்தியாதரன், எதிர்காலத்தில் அவ்வப்போது மேலும் பல ஒப்புதல் வாக்கு மூலங்களை வெளியிடவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பான கருத்தினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதும் அவரது கட்சியான ஈ.பி.டி.பி. மீதும் சுமத்தப்பட்டதாகவும் மூத்த ஊடகவியலாளரான ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார்

000

Related posts:

ஒருமித்த நாடா, ஒற்றை ஆட்சியா : மக்களுக்கு தெளிவு படுத்தப்பட வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
தரகு அரசியல் இலாபங்களுக்காகவே தமிழரசுக் கட்சியின் கூட்டமைப்பு செற்படுகின்றது - செயலாளர் நாயகம் டக்ளஸ...
ஏற்றுமதி அபிவிருத்தித் துறை எந்தளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கின்றது? – டக்ளஸ் எம்.பி கேள்வி!

முற்றுகைக்குள் சிக்கியிருந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர்களை சிறை மீட்டெடுத்தார் டக்ளஸ் தேவானந்தா!
50 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக 15ஆயிரம் வீடுகளைக் கட்டும்பணிகள் மார்கழி மாதம் முதல்வ...
நன்னீர் நிலைகளில் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பு - புதுமுறிப்பு பகுதியில் புனரமைக்கப்படும் தொட்டிகளை பா...