வடக்கு கிழக்கில் காணப்படும் காணி பிரச்சினைக்கு பாதீட்டின் மூலம் விரைவில் தீர்வு கிடைக்கும் – நம்பிக்கை தெரிவித்துள்ளார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, November 17th, 2021

காணி அமைச்சுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி மானியத்தில், இயற்கை அனர்த்தங்கள் காரணமாக காணி இழப்புகள் ஏற்படுகின்றவர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குவதென்பது நல்லதொரு திட்டமாக அமைகின்றது.

அத்துடன் மழை காலங்களில் மக்களின் இடப்பெயர்வுகள், நாளாந்த தேவைகளுக்கான பிரச்சினைகள் போன்றவற்றிலிருந்து நிலையானதொரு தீர்வுக்கு இது வழிவகுக்கும் என்றும் நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலான எனது கருத்துக்களை நாடாளுமன்றில் தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

நிலச் சக்தி (பிம் சவிய) திட்டத்திற்கெனவும் 518 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் ஒரு இலட்சம் காணி உறுதிகள் வழங்கப்பட வேண்டிய இலக்கில் எமது அரசாங்கம் இருக்கின்ற போதிலும், உலகளாவிய அனர்த்தம் காரணமாக 60 ஆயிரம் காணி உறுதிகளே இதுவரையில் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

காணி உறுதிகள், காணிப் பிணக்குகள் தொடர்பான பிரச்சினைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றை விரைந்து தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை காணி அமைச்சர் அவர்கள் மேற்கொள்வார் என எதிர்பார்க்கின்றேன்.

மேலும் அண்மைக் காலம் வரையில் போராட்டக் களம் கண்டிருந்த பாடசாலை அதிபர்கள், ஆசியர்கள் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு, அதற்கென 30 ஆயிரம் மில்லியன் ரூபா அவர்களது ஊதியத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளன. மேலும், கல்வித் துறை மேம்பாடு தொடர்பிலும், உரிய அவதானங்கள் செலுத்தப்பட்டு, போதிய நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  சுகாதாரத் துறையின் மேம்பாடு தொடர்பிலும் விரிவான கவனம் செலுத்தப்பட்டு, நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுளளார்.

அத்துடன் கைத்தொழில் சார்ந்த பெருந்தோட்டச் செய்கை மற்றும் வேளாண் பொருட்கள் உற்பத்தி மேம்பாட்டக்கென வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சுக்கென 800 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

000

Related posts: