நாம் ஆற்றிய பணிகளை தாம் ஆற்றியதாக உரிமை கோருவது கையாலாகாத்தனம் –  டக்ளஸ் எம்பி. சுட்டிக்காட்டு!

Monday, February 5th, 2018

வீட்டுத் திட்மும் வேலைவாய்ப்பு அபிவிருத்தியும் வெறும் சலுகை என்று நிராகரித்தவர்கள் இன்று எதை சாதித்தீர்கள் என்று மக்கள் கேட்கையில் நாம் ஆற்றி சேவைகளை தாம் ஆற்றியதாக உரிமை கோருகின்றார்கள். இது அவர்களது அரசியல் கையாலாகாத்தனம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு இளவாலையில் நடைபெற்ற பரப்பரை கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

சக தமிழ் சுயலாப அரசியல் வாதிகள் தமது சுயநல அரசியலையும் சுகபோக வாழ்வையும்  விட்டு ஒருபோதும்  மக்களுக்காக உழைக்க முன்வரப்போவதில்லை. அவர்கள் தமது சுக நலன்களையும் சுகபோகங்களையும் முன்னிறுத்தியவாறு மக்களுக்கான சேவைகளையும் தேவைகளையும் மறந்து தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவுமே அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் எப்போதும் மக்களுக்காக பேசுகின்றோம் என கூறிக்கொண்டு மாய வித்தைகாட்டி வருகின்றனர். அதுமாத்திரமன்றி மக்களுக்கான  சேவைகள் எதனையும் முன்னெடுக்காத இவர்கள் பிறர் செய்யும் சேவைகளை தாம் செய்ததாகவும் மக்களை ஒரு மாய வலைக்குள் கொண்டு செல்கின்றனர்.

குறிப்பாக 2010ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நான் டில்லிக்கு சென்றிருந்த சமயம் இந்திய பிரதமர் உள்ளிட்ட அரச தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு 50ஆயிரம் வீடுகளைக் கோரினேன்.

எனது முயற்சியால் பெற்ற அந்த திட்டத்தை தமது முயற்சியால்தான் கிடைக்கப் பெற்தென தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்த்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்டு தமது வக்கிர புத்தியை வெளிக்காட்டியுள்ளது.

இந்த விடயம் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பதென்பதற்கு பதிலாக முழு வீட்டையுமே ஒரு சோற்று கோப்பைக்குள் மறைப்பதாகவே அந்தப் பொய்யர்களின் உண்மைமுகம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான பொய்யர்களின் பொய்களை தெரிந்து கொண்டு மக்களுக்கு நேர்மையுடன் உழைக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எமது வீணைச் சின்னத்திற்கு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும்  தெரிவித்தார்.

இதனிடையே அளவெட்டி தெற்கிலும் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

குடியேற்றங்களைப் போன்றே மத வழிபாட்டு ஸ்தலங்களும் வலிந்து புகுத்தப்படக் கூடாது - நாடாளுமன்ற உறுப்பினர...
மாணவர்களது நலனில் அக்கறை கொண்டு புகையிரத தொழிற்சங்கத்தினர் செயற்பட வேண்டும்! அரசும் சில விட்டுக்கொடு...
நீர்கொழும்பு களப்பு அபிவருத்தி திட்டத்தை நிறைவு செய்வதற்கு தடையாக உள்ள காரணிகளை அகற்றுவது தொடர்பில் ...

“NARA” மற்றும் NAQDA நிறுவனங்களின் தலைவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அவசர பணிப்பு...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்களுடன் விசேட கலந்துரையாடல்!
வடக்கில் தொழிற்சாலைகளை மீள ஆரம்பிப்பதற்கும் பற்றிக் கைத்தொழிலை மேலும் ஊக்குவிப்பதற்கும் துறை சார் அம...