கற்பிட்டிப் பிரதேசத்தில் இழுவைமடி தொழிலை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளசிடம் கோரிக்கை!

Tuesday, January 4th, 2022

கற்பிட்டிப் பிரதேசத்தில் இழுவைமடி வலை தொழிலை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி தலைமையில் இன்று கடற்றொழில் அமைச்சரை சந்தித்த கற்பிட்டி கடற்றொழிலாளர் பிரதிநிதிகளினால் குறித்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

கடற்பிட்டியை சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான சுமார் 23 இழுவைமடி படகுகள் நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் இறால் பிடியில் ஈடுபட்டு வந்ததாகவும் , தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றினால் தாக்கல் செய்யப்பட்ட சுற்றுச் சூழல் தொடர்பான நீதிமன்ற வழக்கு காரணமாக, தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், குறித்த வழக்கு தொடர்பாகவும் நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பாகவும் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

Related posts:


திறமையானவர்களுக்கு உரிய சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்...
கையேந்து நிலையையே ஆயுதப் போராட்டம் எமது மக்களுக்கு பெற்றுத்தந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவ...
'செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்' – கிளிநொச்சியில் ஆரம்பித்து வைத்தார் அமைச்ச...