வடக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு – கடுமையான நடவடிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, October 27th, 2022

வடக்கில் போதைப் பொருள் பாவனை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத்தி வருகின்றமை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவசியமான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாகவும் அவசரமாக சிந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், வடக்கில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை நல்வழிப்படுத்தவதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

போதைப் பொருள் பாவனை குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகின்ற சந்தேகநபர்களை, சிறைச் சாலைகளுக்கு அனுப்பாமல், புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை நீதவான் நீதிமன்றிற்கு வழங்க வேண்டும் எனவும்  தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் முதலாவது கலந்துரையாடலிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால், குறித்த விடயத்தினை வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

யுத்தத்தை எதிர்கொண்ட மக்களை உளவியல் தாக்கம் தற்கொலை க்குத் தள்ளுகின்றது  - நாடாளு மன்றத்தில் டக்ளஸ் ...
தீவகத்தில் கடலட்டை வளர்ப்பு தொடர்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!
ஏழு கடல் மைல் சட்டம் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்...

தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை - டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
பலாலி விமான நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தால் வடமாகாணம் பொருளாதார...
கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்ப தேவர் ஆலய மகரஜோதி பெருவிழாவின் சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக...