யுத்தத்தை எதிர்கொண்ட மக்களை உளவியல் தாக்கம் தற்கொலை க்குத் தள்ளுகின்றது  – நாடாளு மன்றத்தில் டக்ளஸ் எம்.பி.!

Friday, September 22nd, 2017

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வருடத்திற்கு 500பேருக்கும் அதிகமானோர் தற்கொலைக்கு முயற்சிப்பதாக தெரியவருகின்றது. இவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி, இறந்து வருவதாகவும், யுத்தத்தின் பின்னரே தற்கொலைக்கு முயல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் வைத்தியசாலை புள்ளி விபரங்களிலிருந்து தெரிவிக்கின்றது. இச்சூழ்நிலையை அவசியம் கருதி, யுத்தப் பாதிப்புகளுக்குள்ளான யாழ் மாவட்டத்தில் தங்களது அமைச்சின் கீழ் உளவியல் ரீதியிலான ஆற்றுப்படுத்தல் பணிகளை ஒரு விஷேட ஏற்பாடாக வடக்கு மாகாணத்தில் பரவலாகவும், செயற்திறண் மிக்கதாகவும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

யுத்தத்தின் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்த மக்கள் உளவியல் பிரச்சினைகளுக்கும், கடன் தொல்லைகளுக்கும், வறுமைக்கும் முகம் கொடுக்க முடியாது தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துவருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று (21.09.2017) சமூக சேவைகள், சமூக வலுவூட்டல் மற்றும் மலையக மரபுரிமைகள் அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கவிடம் கேள்விகளை முன்வைத்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில், யாழ் மாவட்டம் உள்ளிட்ட யுத்தப் பாதிப்புகளுக்கு நேரடியாகவே உட்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடும்ப வறுமையைப் போக்கக்கூடிய வகையில் குறிப்பிட்ட சில காலங்களுக்கு சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவுகளைப் பெறுகின்ற பயனாளிகளின் எண்ணிக்கையைத் தேவை கருதி அதிகரிப்பதற்கும், இம் மக்களின் உடனடி குடும்ப வறுமை நிலையினைப் போக்கும் வகையில் சமுர்த்தி நிவாரனம் தவிர்ந்த வேறு ஏதேனும் உதவித் திட்டங்களை ஒரு விN~ட ஏற்பாடாக மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா? என்றும்,

இந்நிலையில், தற்போதைய சூழ்நிலையின் அவசியம் கருதி, யுத்தப் பாதிப்புகளுக்குள்ளான யாழ். மாவட்டத்தில் தங்களது அமைச்சின் கீழ் உளவியல் ரீதியிலான ஆற்றுப்படுத்தல் பணிகளை ஒரு விN~ட ஏற்பாடாக வட மாகாணம் முழுவதும் பரவலாகவும், செயற்திறண் மிக்கதாகவும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேற்படி தற்கொலை முயற்சிகளுக்கான பிரதான காரணி உளவியல் பிரச்சினைகள் என்றே மருத்துவ நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ள நிலையில், குடும்ப வறுமை மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளும் இதில் முக்கிய பங்கினை வகிப்பதாகத் தெரிய வருகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.

Related posts: