யாழ் வந்த விதை உருளைக்கிழங்குகளில் நோய் தொற்று – அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் – கவனம் செலுத்துமாறும் கோரிக்கை!

Sunday, December 17th, 2023

கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட விதை உருளைக்கிழங்கு நோய் தொற்றுக்குள்ளாகியமை தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்..

யாழ்ப்பாண மாவட்ட உருளைக்கிழங்கு விவசாயிகளுக்காக கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட சுமார் 16 மில்லியன் ரூபாய் பெறுமதியான 21 மெட்ரிக் ரொன் விதை உருளைக்கிழங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள களஞ்சியம் ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் உடனடியாக விவசாய அமைச்சர் மஹிந்த அமர வீரவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன் குறித்த  விடையம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்..

இதன்போது பதிலளித்த விவசாய அமைச்சர் அமரவீர,  குறித்த விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாக தனக்கு உறுதியளித்ததாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயம் தொடர்பில் தானும் அதிக கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


யாழ்ப்பாணம் – கிளிநொச்சியில் 'ஏற்றுமதிக் கிராமம்' திட்டத்தை வினைத்திறனுடன் செயற்படுத்த நடவடிக்கை!
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான புதிய திருத்தப்பட்ட சட்ட மூலம் - துறைசார் நிபுணர்களின் கருத...
உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை பெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்...