வீடமைப்புத் திட்டங்களைப் பூர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகள் அவசியம்! – டக்ளஸ் தேவானந்தா

Thursday, March 31st, 2016

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் கடன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்ட வீடுகளைப் பூர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகள் தேவை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையானது கடன் அடிப்படையில் வீட்டுத் திட்டங்களை எமது மக்களுக்கு வழங்கியுள்ள நிலையில், பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களால் அவ் வீடுகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் முதற்கட்ட கடன்களைப் பெற்று பாரிய பொருளாதார நெறுக்கடிகளுக்கு மத்தியிலும் எமது மக்கள் தங்களுக்கான வீடுகளை அமைக்க ஆரம்பித்துள்ள போதிலும், அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான பொருளாதார வசதியின்றி அவலப்படும் நிலையே காணப்படுகின்றது. இதனால் பாதி முடிக்கப்பட்ட வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் காடுகள் அடர்ந்து காணப்படுவதுடன் எமது மக்கள் குடியேற இயலாத நிலையும் காணப்படுகின்றது.

எனவே, இம் மக்களுக்கு பயனுள்ள வகையில் விஷேட மாற்றுத் திட்டமொன்றை தேசிய வீடமைப்பு அதிகார சபை விரைவில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கடற்றொழில் மற்றும் நன்னீர் வாழ்வாதார அபிவிருத்திக்கும் தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள்...
அபிவிருத்தி சார்ந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் தடையாக...
வெடுக்குநாறி மலை விவகாரம் -தமிழ்த் தரப்பினரையும் இணைத்து மீள ஆய்வு செய்ய வேண்டும் - ஜானாதிபதிக்கு ஈ....

நல்லாட்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது எதிர்காலத்தை தேடி ஈ.பி.டி.பியின் தலைமையகத்தில்!
வடக்கு விவசாயிகளுக்கு விதை உருளைக் கிழங்கு வழங்க நிதி ஒதுக்கீடு - அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கு ஜனா...
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர்களான ரோஹித அபயகுணவர்த்தன மற்றும் டக்ளஸ் தேவானந்த...