யாழ். மாட்டின் குருமடத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அருட்தந்தை பிரகாஸ் கோரிக்கை!

Monday, February 17th, 2020

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள மாட்டின் குருமடத்தை கட்டி முடிப்பதற்கான நிதி உதவியை பெற்றுத்தந்து குருமடத்தின் பணிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் குருமடத்தின் நிர்வாக இயக்குனர் அருட்தந்தை பாஸ்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் அலுவலகத்திற்கு வருகைதந்து அமைச்சரை சந்தித்து குருமடத்தின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கூறியபோதே குருமுதல்வர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

மேலும்-

கடந்த ஆட்சிக்காலத்தில் குறுகிய அரசியல் நோக்கத்துடன் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தவர்கள் எமது குருமடத்தையும் கட்டுவதற்கு உதவி செய்வதாக கூறி அதற்கான அடிக்கல்லை அன்றைய வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசவினால் நாட்டப்பட்டது.

ஆனால் அந்த திட்டம் அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்றுவிட்டதால் நாம் ஏமாற்றமடைந்துள்ளோம்.இதனால் எமது செயற்பாடுகளை நாம் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் முன்னெடுத்து வருகின்றோம்.

அந்தவகையில் குறித்த கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கான உதவியை செய்து தந்து எமது குருமடத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு கோரிக்கை விடுத்தார்.

குருமுதல்வரின கருத்துக்களை கருத்தில் கொண்ட அமைச்சர் காலக்கிரமத்தில் நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிப்பதாக தெரிவித்திருந்ததுடன் வரவுள்ள சந்தர்ப்பத்தை மக்கள் சரியாக பயன்படுத்துவார்களேயானால் இதுபோன்ற பல்வேறு தேவைப்பாடுகளுக்கு சுலபமாக தீர்வுகாண முடியும் என்றார்.

Related posts:

13ஆவதுதிருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்திலிருந்து ஆரம்பிப்பதே தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை...
கடற்றொழில் அமைச்சின் செயற்திட்டங்கள் மக்களை நோக்கியதாக முழுமையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – நாட...
கச்சதீவைப் பெற்றதால் பல மடங்கு கடல் விளை நிலங்களை இழந்து விட்டோம் - தமிழ் அரசியல்வாதிகளின் அழுத்தம் ...

கரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? - நா...
வடக்கில் தொழில் துறைகளை உருவாக்குவது தொடர்பில் இந்திய துணைத் தூதுவர் குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...
பாடசாலை சமூகம் அழைப்பு - மஹாஜனாக் கல்லூரிக்கு அமைச்சர் திடீர் விஜயம் – பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்ப...