வடக்கில் தொழில் துறைகளை உருவாக்குவது தொடர்பில் இந்திய துணைத் தூதுவர் குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Friday, December 20th, 2019


வடக்கு மாகாணத்தில்  தொழில் துறைகளை  மேம்படுத்துவதற்கான முயற்சிகள் உருவாக்குவது தொடர்பில்  இந்திய துணை தூதுவர் பாலச்சந்திரன் தலைமையிலான குழுவினர் கடல்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பு இன்றையதினம் அமைச்சரின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது வடக்கில் மக்களின் வாவாதாரங்களை மேம்படுத்துவதற்கு ஏற்ற தொழில் வாய்ப்புக்களை  உருவாக்குவதற்கான ஏது நிலைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக கடல் வளம் சார் தொழில்துறைகளை ஊக்கவிப்பதுடன் கடல்சார் வளங்களை பயன்படுத்தி கடல்பாசி வளர்ப்பு, மற்றும் பனைவளத்தை மூலதனமாகக் கொண்ட சிறுதொழில் முயற்சிகளை கண்டறிந்து வடக்கிலுள்ள தெழில்வாய்ப்பற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி கொடுப்பதுடன்  தகவல் தொழில்நுட்பம் துறையை வடக்கில் மேம்படுத்தி அதனூடாக பல வேலைத்திட்டங்களை மேற்கொள்வது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

Related posts:


கல்விக் கொள்கையில் மாற்றாந்தாய் மனப்பான்மை இருக்கின்ற போது சமச்சீரான சமூகத்தை எவ்வாறு உருவாக்கப் முட...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்று “அம்பான்” புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈ...
வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் 9 ஏ சித்தி - அமைச்சர் டக்ளஸ் நே...