கச்சதீவைப் பெற்றதால் பல மடங்கு கடல் விளை நிலங்களை இழந்து விட்டோம் – தமிழ் அரசியல்வாதிகளின் அழுத்தம் போதாது. என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Sunday, August 20th, 2023

1976 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை மூலம் கச்சதீவு எமக்குரிய கடற்பரப்பாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் நாம் 80 விதமான கடல் விளை நிலங்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடத்தொழில் அமைச்சருமான டக்ளஸ்  தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாடு மீனவர்கள் மாநாட்டில் கச்சதீவை மீட்போம் என தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்த கருத்துத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –  இந்தியாவில் தேர்தல் வரப்போகிற நிலையில் அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல்கள் வரும்போது கச்ச தீவு தொடர்பில் கருத்துக்கள் எழுவது வழமையான செயல்பாடுதான்.

1974 ஆம் ஆண்டு இருநாட்டு மீனவர்களும் இலங்கையிலும் இந்தியாவிலும் கடற் தொழிலில் ஈடுபடலாம் என ஒரு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவ் உடன்படிக்கை மூலம் இலங்கை கப்பல் கூட்டுதாபனத்தின் பாரிய ஆறு மீன்பிடி படகுகள் இந்தியா கடற்பரப்புகள் சென்று தொழிலில் ஈடுபட்டு வந்தன.

1974 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை 1976 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட நிலையில் இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்பரப்புக்குள்ளும் இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்பரப்பு க்குள்ளும் நுழைய முடியாது என உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த உடன்படிக்கை மூலம் கச்சதீவு கடற்பரப்பிலிருந்து இந்தியா வெளியேறிய நிலையில் இந்தியா மீனவர்களின் மீன்பிடி வலைகளை உலர்த்துவதற்கும் கச்சதீவு அந்தோணியார் திருவிழாவில் பங்கு பெற்றுவதற்கும் தடை ஏற்படுத்தப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டது.

1976 ஆம் ஆண்டு  மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மூலம் கச்சதீவு எமக்குரிய கடற் பரப்பாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் கச்சதீவைக் காட்டிலும் 80 மடங்கு கடல் விளை நிலங்களை நாம் இழக்க வேண்டிய சூழலை ஏற்பட்டது.

இந்தியா மீனவர்கள் எல்லை தாண்டிய மீன்பிடியினால் வடக்கு கடற் தொழிலாளர்கள் தொடர்ச்சியாகப் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆனால் இந்திய தரப்பில் கூறும் போது மீன்பிடிக்கச் சென்ற இந்திய மீனவர்களை சிங்கள இராணுவம் மற்றும் சிங்களக் கடற்படை கைது செய்வதாகப் பிரசாரம் செய்யப்படுகிறது.

நான் இவர்களுடைய பிரச்சாரத்தின் உண்மை நிலை தொடர்பில்  பலமுறை இந்திய மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் தெரிவித்துள்ளேன்.

ஆனால் வடபகுதியில் உள்ள  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் இந்திய பிரதமருக்கும் தமிழ்நாட்டில் இருந்து  இலங்கை கடற்பரப்புக்குள் ஆத்துமீறி தொழில் நடவடிக்கையையில் ஈடுபடும்  இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்படுகிறார்கள் என்ற உண்மையை அழுத்தமாக தெரிவிக்க வேண்டும்.

ஆகவே கச்சதீவு விவகாரம் தேர்தல்கள் வரும்போது பேசு பொருளாக மாறுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டுமென  அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிக்க விடுவதா - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி!
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் திட்டங்களை கடனுக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றீர்கள் – நாடாளு...
கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள தொழில்சார் பாதிப்புக்களை களைவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...

ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!
விசாரணைகள் தமக்கு திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை - சிவபுரம் கிராம மக்களின் சமூகப் பிரதிநிதிகள்...
கடும் பொருளாதார நெருக்கடி நிலை - மக்கள் போராட்டங்களால் நாட்டில் பாரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள...