கடும் பொருளாதார நெருக்கடி நிலை – மக்கள் போராட்டங்களால் நாட்டில் பாரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Sunday, July 17th, 2022

நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி நிலை உக்கிரமடைந்ததை அடுத்து ஏற்பட்ட மக்கள் போராட்டங்களால் நாட்டில் பாரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இலங்கையின் இடைக்கால ஜனாதிபதிப் பதவிக்குத் தற்போதைய பதில் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவர் எனவும் தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி நிலை உக்கிரமடைந்ததை அடுத்து ஏற்பட்ட மக்கள் போராட்டங்களால் நாட்டில் பாரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போராட்டங்கள் காரணமாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியதுடன், தொடர்ந்து அந்த பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னரும் போராட்டங்கள் மேலும் வலுவடைந்த  நிலையில்  தற்போது முன்னாள் ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி அந்த இடம் தற்போது வெற்றிடமாகியுள்ள நிலையில்  பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், நிரந்தர ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான முயற்சிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குறித்த பதவிக்காக தேர்தலில் போட்டியிட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் எனவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கையின் இடைக்கால ஜனாதிபதி பதவிக்குத் தற்போதைய பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: