யாழ் போதனா வைத்தியசாலையின் மேம்பாடுகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பணிப்பாளர் சத்தியமூர்த்தி கலந்துரையாடல்!
Friday, November 5th, 2021
யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து யாழ். பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி சத்தியமூர்த்தி மற்றும் வைத்தியக் கலாநிதி அரவிந்தன் ஆகியோர் கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் காலை நடைபெற்றது. இதன்போது வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி மற்றும் கட்டுமாண தேவைப்பாடுகள் தொடர்பிலும் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் வைத்தியர்கள் அமைச்சரிடம் எடுத்துரைத்திருந்தனர்.
குறித்த விடயங்களை அவதானத்திற் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்று அவற்றுக்க தீர்வு கண்டுதருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அர்த்தமற்ற உணர்ச்சி பேச்சுக்களுக்கு அடிமைப்பட்டு அனைத்தையும் இழந்துவிட்டோம் - டக்ளஸ் தேவானந்தாவிடம் ...
டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் மகளிர் பேராளர் மாநாடு!
கூட்டமைப்பு நடத்திக்கொண்டிருப்பது வேடிக்கை அரசியல் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
|
|
|


