அர்த்தமற்ற உணர்ச்சி பேச்சுக்களுக்கு அடிமைப்பட்டு அனைத்தையும் இழந்துவிட்டோம் – டக்ளஸ் தேவானந்தாவிடம் முல்லை. செல்வபுரம் மக்கள் சுட்டிக்காட்டு!

Wednesday, October 26th, 2016

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறிவரும் போலியான உரிமை என்ற உணர்ச்சி மிக்க சொல்லுக்கு அடிமைப்பட்டு எமது வாக்குரிமையை அவர்களுக்கு அள்ளி வழங்கியதால்தான் இன்று நாம் எமது வாழ்வுரிமையுடன் எதிர்காலத்தையும் தொலைத்த மக்களாக வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. உங்கள் வரவு வறுமையில் வாடும் எமது பகுதியின் வாழ்வியலை தூக்கி நிறுத்தும் வல்லமை கொண்ட தலைவரது வரவாக அமைந்தள்ளது என முல்லைத்தீவு செல்வபுரம் பகுதி மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முல்லைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த டக்களஸ் தேவானந்தாவை சந்தித்து தாம் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பாக செல்வபுரம் பகுதி மக்கள் எடுத்துக் கூறியிருந்த  போதே குறித்த பகுதி மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

எமது பகுதியில் நாம் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் வடிகால் அமைப்பு தொடர்பான கோரிக்கையை எமது பகுதி தமிழ் அரசியல் தரப்பு பிரதிநிகளிடம் பலமுறை எடுத்தக்கூறியிருந்தும்  அதற்கான தீர்வுகளை அவர்கள் இன்றுவரை பெற்றுத்தராதுள்ளது வேதனையளிக்கின்றது.

12

நாம் நாளாந்தம் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளைகூட தீர்த்து வைப்பதற்கு எமது பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோ மாகாணசபை உறுப்பினர்களோ முன்வருவதில்லை. மாறாக எமது பிரச்சினைகளை வைத்து தமது சுயலாப, சுகபோக வாழ்க்கையை மட்டுமே மேலும் மேம்படுத்தி வருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரது சுயநலன்களை அறிந்திராத நாம் எமது வாழ்வியலை மேம்படுத்துவபர்களாகவே அவர்களை நம்பியிருந்தோம். அவர்களது சுயநலன்களுக்காக மக்களுக்காக நேர்மையாக உழைத்துவரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினது சேவைகளை எண்ணிப்பார்க்க தவறிவிட்டோம். இந்த நிலையால்தான் நாம் இன்று எமது எதிர்கால கனவுகளுடன் வாழ்வியலையும் தொலைத்தவர்களாக வாழவேண்டியுள்ளது.

இப்பிரதேசம் பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களை அதிகமாக கொண்டுள்ளதால் தமது குடும்ப முன்னேற்றத்திற்கான நிரந்தர தொழில்வாய்ப்பு ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைளை ஏற்பாடு செய்துதருமாறும் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

11

அத்துடன் மழைகாலங்களில் எமது பகுதி மழைநீரினால் மூழ்கடிக்கப்படுகின்றது. இப்பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கான வடிகாலை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துத் தருமாறும் வீட்டுத்திட்டம், படித்த இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்பு மற்றும் தாழ்ந்த பகுதிகளை மண் இட்டு நிரப்பவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தருமாறும்  டக்ளஸ் தேவானந்தவிடம் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மக்களது கோரிக்கைகளையும் நிலைமைகளையும் ஆராய்ந்தறிந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளூடாக குறித்த பகுதி மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கிளிநொச்சியை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியதுபோல் மக்களது வாழ்வியலையும் பலப்படுத்து வேன் - டக்ளஸ் தே...
அழுத்தங்களுக்கு நாம் அடிபணிந்திருந்தால் யுத்த வடுக்களை சுமந்த மக்களுக்கான எமது பணிகள் தொடர்ந்திருக...
தனியாரால் அபகரிக்கப்பட்ட “பாடுகளை” மீளவும் பெற்றுத்தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கச்சாய...