ஈ.பி.டி.பியின் அரசியல் செயற்பாடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்!

Sunday, January 12th, 2025


யாழ் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ( ஈ.பி.டி.பி) செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

யாழ் மாவடத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள்  செயற்பாட்டாளர்கள் பிரசன்னத்துடன் இன்றையதினம்  (12.01.2025) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அரசியல் செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன்
தேர்தல் பின்னடைவுகள் குறித்த அக, புற காரணிகள் தொடர்பில் கண்டறிய செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் மூலம் பிரதேசங்கள் தோறும் நடைபெற்ற கூட்டங்கள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும் பின்னடைவிலிருந்து கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்களை மறுசீரமைப்பதற்கான ஏது நிலைகள் குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்படன.

இன்நிலையில், கட்சியின் தேசிய மாநாட்டை விரைவில் நடத்தி அதனூடாக கட்சியின் வலுவான கட்டமைப்பை கட்டமைத்து புதிய உத்வேகத்துடன் எதிர்வரும் காலங்களில் உத்வேகத்துடன்  பயணிப்பதற்கான பொறிமுறைகளும் செயலாளர் நாயகத்தினால் எடுத்துக் கூறப்பட்டமை குதிப்பிடத்தக்கது

000

Related posts:

மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மைகளும் தோண்டி எடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்...
குறுகிய நோக்கங்களுக்காக வன்முறைகள் ஊடாக தமது எதிர்பார்ப்பை நிறைவேற்ற எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாத...
பலாலி வடக்கிற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – பூர்வீக மக்களுக்கே முன்னுரிமை வேண்டும் என அன்ரனிபுரம் மக்க...

கப்பாச்சி கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவா...
சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய பேருவளை துறைமுகத்தின் செயற...
இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குமாறு தமிழகம் கோரிக்கை - நிராகரித்துள்ளதா...