நலிவுற்ற மக்களது வாழ்வியலையும் மேம்படுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா- ஊரெழு மக்கள் சுட்டிக்காட்டு!

Wednesday, June 29th, 2016

எமது பகுதியின் அபிவிருத்தியில் மிகுந்த அக்கறைகொண்டு அதற்காக கடுமையாக உழைத்தவர் டக்ளஸ் தேவானந்தாவே என்றும் எதிர்காலங்களிலும் அவ்வாறே எமது பகுதியின் அபிவிருத்தியை அவரால் மட்டுமே முன்னெடுக்க முடியும்  என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் ஊரெழு முத்தமிழ் விளையாட்டுக்களக பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை செயலகத்தில் நேற்றையதினம்(28) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது விளையாட்டுக் கழகத்திற்கு மைதானம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான கோரிக்கையை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்தபின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் எவரும் கவனிப்பாரற்ற நிலையில் எமது கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டபோது எமது கோரிக்கைக்கு அமைவாக வருகைதந்து எமது பகுதி மக்களது தேவைப்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே கவனம் செலுத்தியிருந்தார்.

DSC04716

அதுமட்டுமன்றி பெருமளவான அபிவிருத்தி மற்றும் மக்கள் நலமேம்பாட்டு திட்டங்களை உருவாக்கி அவற்றை நல்ல முறையில் எமக்காக பெற்றுத்தந்திருந்தார். அந்தவகையில் எமது கிராமம் தற்போது கண்டிருக்கும் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டிற்கு டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய பங்களிப்பகளை நாம் ஒருபோதும் மறந்துவிடமாட்டோம்.

இதனடிப்படையில், பல தலைமுறைகளாக பாவித்துவரும் தனிநபருக்கு சொந்தமான காணியையே நாம் விளையாட்டு மைதானமாக பாவித்து வந்திருக்கின்றோம். இந்நிலையில் குறித்த அந்த மைதானத்தை எமது கழகத்திற்காகவும் விளையாட்டு வீரர்களுக்காகவும் பெற்றுக்கொள்ளும் வகையில் காணி கொள்வனவு தொடர்பாக பேச்சுக்களை நடத்திவிட்டு இங்கு வந்திருக்கின்றோம்.

DSC04712

குறித்த அந்த மைதானதானம் எமது பகுதிக்கு கிடைக்கப்பெறும் பட்சத்தில் எமது கிராமத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமன்றி எமது சமூகத்தின் மேம்பாட்டிற்கும் அபிவிருத்திக்கும் மேலும் உந்துசக்தியாக அமையுமென்றும் குறித்த அக்காணியை தமது கழகத்திற்கென பெற்றுத்தருமாறும் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊரெழு முத்தமிழ் விளையாட்டு கழக பிரதிநிதிகள் கோரிக்கைவிடுத்தனர்.

அவர்களது கோரிக்கையை செவிமடுத்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த காணியை மைதான பயன்பாட்டிற்கென பெற்றுத்தருவதற்கு காலக்கிரமத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிததிருந்தார்.

இதன்போது முத்தமிழ் விளையாட்டு கழக பிரதிநிதிகளுடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலி.கிழக்கு நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் உடனிருந்தார்.

DSC04708

Related posts: