உரிமைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் விவேகமற்ற அரசியல் தலைமைகளினால் வழிமாறிச் சென்று மக்களை கையேந்து நிலைக்கு தள்ளியுள்ளது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, July 23rd, 2020

தமிழ் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் விவேகமற்ற அரசியல் தலைமைகளினால் வழிமாறிச் சென்று இருந்தவற்றையும் அழித்து  மக்களை கையேந்து நிலைக்கு தள்ளியுள்ளது என்று அல்வாய் இளங்கோ விளையாட்டுக் கழகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்

அத்துடன் அடைய முடியாத இலக்குக்காக ஆயுதம் தூக்கிய நாம், அதன் நியாயமற்ற தன்மையை உணர்ந்து,  அதற்கான மாற்று வழியாக இணக்க அரசியலை தெரிவு செய்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்த தெரிவிக்கையில் – 

கடந்த காலங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த அரசியல் அதிகாரங்களின் ஊடாக எத்தனையோ மக்கள் நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவற்றுக்காக தன்னால் திருப்தியடைய முடியவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் மக்களின் தேவைகளுடன் ஒப்பிடுகின்ற போது இன்னும் எத்தனையோ விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காணப்படும் எனவும், குறிப்பாக தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்த அமைச்சர் அவர்கள், அனைத்து கடற்றொழிலாளர்களும் தங்களுக்கு பொருத்தமான தொழில் முறைகளை  ஏனையவர்களுக்கு பாதிப்பின்றி மேற்கொள்ள வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்

அந்தவகையில் எனது சாணக்கியமான நடைமுறைச் சாத்திய அரசியல் வழிமுறையூடாக எமது மக்களின் அபிலாசைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்ற திடமான நம்பிக்கை உண்டு அதற்காகவே உங்களை நாடி ஈ.பி.டி.பி வருகின்றது. ஆகவே கடந்த கால தவறான தீர்மானங்களை விடுத்து நியாயமானவர்களின் பின்னால் அணி திரளுங்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: