வதிரி மெ.மி.த.க பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பாடசாலை கல்விச் சமூகம் ஆராய்வு!

Sunday, December 22nd, 2019

வதிரி மெ.மி.த.க பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக பாடசாலையின் அதிபர் தலைமையிலான கல்விச் சமூகத்தினர் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பானத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இன்றையதினம் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலை நிர்வாகத்தினர் கற்றல் செயற்பாடுகளின் போதும் கல்விசாரா செயற்பாடுகளின் போதும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில்  தெரியப்படுத்தியிருந்தனர்.

அத்துடன் மாணவர்களது கற்பித்தலுக்கு ஆங்கில ஆசிரியர் இன்மை மற்றும் சங்கீத பாட இசைக்கருவிகள் இன்மை குடிநீர் பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள் உள்ளடங்கலான பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறும் அமைச்சரிடம் கோரிக்கை கோரிக்கை விடுத்தனர்.

குறித்த பாடசாலை சமூகத்தினரின் கோரிக்கைகளை அவதானத்தில் கொள்வதாகவும் ஆங்கில ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவதாகவும் தெரிவித்த அமைச்சர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் –

உங்கள் ஒவ்வொருவர் மத்தியிலும் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண வேண்டுமானால் மக்களை நேசிக்கும் சரியானதும் வலுவானதுமான மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குவது அவசியமாகும். அவ்வாறு உருவாக்கும் போதுதான் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்துக்கும் நிரந்தர தீர்வுகளை காணமுடியும் .

அந்த சூழ்நிலையை உருவாக்க மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் தேர்தல் காலங்களில் சிந்தித்து செயற்படவேண்டியது அவசியம்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நான் மக்களிடம் கோரியதை ஏற்று மக்கள் வாக்களித்திருந்தால் நிச்சயம் எம்மால் உங்கள் தேவைகளை நிறைவுசெய்திருக்க முடியும்.

ஆனாலும் அதற்கான ஆதரவை மக்கள் எனக்கு பெற்றுத்தந்திருக்கவில்லை. இவ்வாறான சங்கடமான நிலையில் எவ்வாறு நான் மத்திய அரசிடம் இருந்து உதவிகளை எதிர்பார்க்க முடியும்.

அந்தவகையில் வரவுள்ள தேர்தலிலாவது என் மீது நம்பிக்கை வைத்து எமது கரங்களுக்கு உங்கள் அரசியல் பலத்தை தாருங்கள். அவ்வாறான நிலையை நீங்கள் எனக்கு உருவாக்கி தருவீர்களானால் நிச்சயம் நான் மிகவிரைவில் அனைத்து தேவைப்பாடுகளுக்கும் தீர்வுகளை பெற்றுத்தருவேன். அதற்கான நம்பிக்கையும் என்னிடம் உள்ளது என்றார்.

Related posts:

கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு வினைத்திறன் கொண்ட நிர்வாகக் கட்டமைப்புபை விரைவாக ஏற...
இந்திய மீன்பிடியாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன்...
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை முறியடித்து வளமான பொருளாதா எதிர்காலத்தினை அரசாங்கம் உருவாக்கு...

வடக்கில் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கென ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு விரைவில் நஷ்ட ஈட...
தோற்றுப்போன இனம் என்ற உணர்வை மாற்றுதற்கு ஒத்துழையுங்கள்: மலையாள புரம் மககள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ...