யாழ் நகர்ப் பகுதியில் நவீன வசதிகளுடன் உருவாகவுள்ள பொது மலசலகூட தொகுதி – அமைச்சர் டக்ளஸ் துரித நடவடிக்கை!
Saturday, June 1st, 2024
யாழ் நகர்ப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பொது மலசலகூட தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான் ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கள ஆய்வி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதிகளுக்கு தினமும் வரும் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் அவசர அவசிய தேவைகருதி நகரப்பகுதியில் நவீன வசதிகளை கொண்ட பொது மலசலகூடம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன் வைக்கப்பட்ட திட்டத்திற்கு அமையவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
இன்நிலையில் குறித்த மலசல கூட தொகுதியை அமைப்பதற்கு பொருத்தமான இட அமைவுகளை அடையாளம் காணும் வகையில் நேற்றைய கள விஜயம் அமைந்திருந்தது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த திட்டமானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டமிடல்களை அடுத்து விரைவில் அதன் அடைவு மட்டத்தை எட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நவீன வசதிகளை கொண்ட பொது மலசலகூடம் ஒன்றை அமைப்பதற்கு ஏற்ற இடங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிவுடன் யாழ் மாநகர ஆணையாளர் , யாழ் பிரதேச செயலாளர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளும் பங்கேற்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


