வறுமையில் முதன்மை மாகாணங்களாக வடக்கு கிழக்கு இருக்கின்றது – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Thursday, September 20th, 2018

நாட்டின் வறுமை அதிகம் கொண்ட மாகாணமாக வடக்கு மாகாணமும், அடுத்த இரண்டாவது நிலையில் கிழக்கு மாகாணமும் காணப்படுகின்றது. அந்தவகையில் வடக்கு மாகாணம் வறுமை நிலையில் 7.7 வீதமாகவும், கிழக்கு மாகாணம் 7.3 வீதமாகவும் கொண்டிருக்கின்றன.

மாவட்ட ரீதியாகப் பார்க்கின்றபோது கிளிநொச்சி மாவட்டமே 18.2 வீதத்தில் அதி உச்ச நிலை வறுமை கொண்ட மாவட்டமாக இருக்கின்றது. அதேநேரம், வறட்சி காரணமாக மிக அதிகமான குடும்பங்கள் – அதாவது சுமார் 33 ஆயிரத்து 165 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட மாவட்டமாகவும் கிளிநொச்சி மாவட்டமே காணப்படுகின்றது.

வறுமையிலும் முதன்மை, வறட்சியிலும் முதன்மை என்ற வகையில் கிளிநொச்சி மாவட்டம் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், நீங்களும் அடிக்கடி வரிகளை அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில், இங்குள்ள எமது மக்கள் தங்களது வாழ்க்கையை முன்னெடுப்பது எப்படி என நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? எனக் கேட்க விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகள், பொருளாதார சேவை விதிப்பனவு மற்றும் பெறுமதி சேர் வரி தொடர்பிலான சட்டமூலங்கள் தொடர்பில் இடம்பெறுகின்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

வறுமை நிலையில் இந்த நாட்டில் முதலாம் இடம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு என்றால் இரண்டாம் இடம் முல்லைத்தீவிற்கு. மூன்றாம் இடம் மட்டக்களப்பிற்கு. நான்காம் இடம் திருகோணமலைக்கு. ஐந்தாம் இடம் யாழ்ப்பாணத்திற்கு.

வடக்கு மகாணம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு மிக முக்கிய காரணகர்த்தாக்கள் சுயலாப தமிழ்  அரசியல்வாதிகள் என்பதில் சற்றேனும் சந்தேகமில்லை. இதனை நீங்களும் அறிவீர்கள். அதனால் எவ்விதமான தயக்கமும் இன்றி வடக்கு மாகாண சபைக்கென நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்கிறீர்கள். உங்களுக்குத தெரியும், அந்த நிதி ஒதுக்கீடுகள் உங்களுக்கே திரும்பி வருமென்று. பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி சொல்கிறீர்கள். உங்களுக்குத் தெரியும் அவை யாவும் வடக்கு மகாண சபையால் நிராகரிக்கப்படும் என்று. பின்னர் அவற்றை அப்படியே வேறு பக்கமாகத் திருப்பிக் கொள்கிறீர்கள்.

Related posts: