அரசியல் கைதிகளா? அரசியல் அற்ற கைதிகளா? என்பது அவசியமில்லை: கைதிகளின் விடுதலையே அவசியமானது!

Wednesday, May 9th, 2018

அரசியல் கைதிகள் என இந்த நாட்டில் எவருமே இல்லை என ஏற்கனவே நீதி அமைச்சரும், நாட்டின் தலைவரும் கூறியிருக்கின்றார்கள் என்பதை நான் அறிவேன். எனவே, அவர்கள் அரசியல் கைதிகளா? அரசியல் அற்ற கைதிகளா? என்ற தலைப்பு அவசியமில்லை என்றே கருதுகின்றேன். அரசியல் கைதிகள் எனக் குறிப்பிடப்படுவதால்தான் அவர்களது விடுதலைகள் தாமதமாகின்றன எனில், அந்த தலைப்பு தேவையற்றது. இங்கு தலைப்பு முக்கியமல்ல. அவர்கள் தொடர்பில் நியாயமான ஏற்பாடுகளே அவசியமாகும் என்பதையே நான் வலியுறுத்த விரும்புகின்றேன் – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நீதித்துறை திருத்தச் சட்டமூலம், காலவிதிப்பு சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இன்னமும் 110 பேர் இதுவரையில் விடுவிக்கப்படாது பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 14 பேருக்கு இதுவரையில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செயப்படவில்லை என்றும், 44 பேர் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டிருப்பினும், அவ்வழக்குகள் இழுத்தடிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், 35 பேர் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இந்தக் கைதிகளின் நிலைமைகளைப் பாரக்கின்றபோது, ‘எய்தவன் போக, அம்புகளை நோகவைத்துக் கொண்டிருக்கின்ற’ கதையாகத்தான் இருக்கின்றது.  எனவே அவர்களது நிலைமைகளை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே அவசியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

எமக்கு கிடைக்கும் அரசியல் பலமே தமிழ் மக்களது தலைவிதியை மாற்றி எழுதும் - டக்ளஸ் தேவானந்தா!
இயற்கை அனர்த்தங்களின்போது மக்கள்மீதும், இயற்கை மீதும் பழிபோடுவது முறையா?சபையில் டக்ளஸ் தேவானந்தா கேள...
எரிபொருள் விலையேற்றத்தினால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல நாள் கலன்களின் உரிமையாளர்கள் அமை...