பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துறைசார் தரப்பினருடன் ஆராய்வு!

Friday, July 29th, 2022

இங்கையிலுள்ள பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில்  லங்கா ஐ ஓ சி நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் திரு குப்தா மற்றும் அவரது அதிகாரிகளுக்கும் படகு உரிமையாளர்கள் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கிடையே இன்று (29) அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் டொலர் மற்றும் இலங்கை பணத்தில் படகுகளுக்கு தொடர்ச்சியாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் உதவ வேண்டும் என்று படகு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எரிபொருள் பிரச்சினையால் கடற்றொழிலாளர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அதனால் கடற்றொழிலுக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் கவலை வெளியிட்ட அமைசசர் டக்ளஸ் தேவானந்தா, முடியுமானவகையில் விஷேடமான ஏற்பாடுகளின் அடிப்படையில் கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொடுக்க தாம் முயற்சிகளை மேற்கொள்வதாகவும்  தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரித்த குப்தா அவர்கள், பல்வேறு பாரிய நிறுவனங்கள் தம்மிடம் எரிபொருளுக்கான கோரிக்கையை விடுப்பதாகவும் அவர்களில் பலர் டொலர்களை வழங்க முன்வந்திருப்பதாகவும் அவ்வாறான நிலையில் கடற்றொழில் அமைச்சர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக கடற்றொழிலாளர்களுக்கும் ஓகஸ்ட் 15 திகதிக்குப் பின்னர் கிரமமாக எரிபொருளை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும்  கடற்றொழில் துறையில்  எரிபொருள் தட்டுப்பாட்டினால்  ஏற்றுமதியாளர்களும் குறிப்பிடத்தக்களவு  பாதிப்புக்களை எதிர்கொண்டு வருவதால், ஏற்றுமதியாளர்கள் முடியுமானளவு டொலர்களை வழங்கினால் அது வரவேற்கப்படும் என்றும் தெரிவித்தார்.

000

Related posts:

நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள் - வலி வடக்கு மக்கள் மத்தியில் டக்ள...
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடு அமைக்க எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்...
யாழ். மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஒழுங்கமைப்பில் ஜனாதிபதி புத்திஜீவிகள் இடையே கலந்த...

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்...
தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு மகஜன எக்சத் பெரமுன முழுமையான பங்களிப்பை வழங்கும் என நம்புகி...
ஒலுவில் துறைமுகத்தில் மீனுக்கான உணவு மற்றும் மீன் உணவு உற்பத்தித் தொழிற்சாலை – முதலீடு செய்ய தயாராக ...