ஒலுவில் துறைமுகத்தில் மீனுக்கான உணவு மற்றும் மீன் உணவு உற்பத்தித் தொழிற்சாலை – முதலீடு செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கொரிய முதலீட்டாளர்கள் தெரிவிப்பு!

Tuesday, August 29th, 2023

ஒலுவில் துறைமுகப்பகுதியில் மீனுக்கான உணவு மற்றும் மீன் உணவு உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றை நிறுவி அதன் தயாரிப்புகளை கொரிய நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கு முதலீடுகளைச் செய்வதற்கு தாம் தயாராக இருப்பதாக இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த கொரிய முதலீட்டாளர்கள் குழு தெரிவித்துள்ளனர்.

மேற்குறித்த முதலீட்டுடன் படகு தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நிறுவுவதற்கும் தாம் விரும்புவதாகவும் கொரியாவின் முதலீட்டாளர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

இதனிடையே

படகு கண்காணிப்புக் கருவிகள் பொருத்திய படகுகளை பயன்படுத்தும் பல நாள் படகுகள் சர்வதேச எல்லைகளை தாண்டுவது மற்றும் சர்வதேச எல்லைகளை நெருங்கும்போது கண்காணிப்புக் கருவிகளின் இயங்கு நிலையை நிறுத்துவது போன்ற குற்றங்களை செய்ததாக கருதப்படும் படகு உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடியுள்ளார்..

இக்கலந்துரையாடலின்போது  அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் குற்றங்கள் குறித்த விசாரணை அதிகாரியும் கலந்து கொண்டனர்

இதேவேளை நாட்டில் கடுமையான வறட்சி நிலவிய நிலையில் நன்னீர் நிலைகளில் மீன்கள் இறந்தது மற்றும் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் தொடர்பாக  நெக்டா நிறுவனத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக நெக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலின்போது அமைச்சின் செயலாளரும் கலந்து கொண்டுள்ளார்..

இதனிடையே நன்னீர் மீன்வளர்ப்பு செய்கையில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் கொண்டுள்ளதாக இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர் ஒருவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று அமைச்சில் சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: