யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத் திருவிழவில் அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு!

Sunday, April 16th, 2023

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் முற்றவெளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத் திருவிழா நேற்று ஆரம்பமானது.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

இந்த உணவு திருவிழா இன்றும் மதியம் 2 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இடம்பெறவுள்ளது

உணவு திருவிழாவில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாரம்பரிய உணவு வகைகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தவும் உள்ளூர் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாரம்பரிய உணவுத் திருவிழாவுடன் பாரம்பரிய இசை நிகழ்வும் இடம்பெற்றது.பாரம்பரிய இசை நிகழ்வில் பங்கேற்ற கலைஞர்களை கௌரவித்து அமைச்சர் சான்றிதழ்களை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த யாழ் பல்கலைக்கழக ஊழியர்க...
கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டதன் விளைவே குடிநீருக்கும் கோரிக்கை வைக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது ...
நெடுவூர்த் திருவிழாவின்’ இறுதி நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு – பிரதேசத்தின் புத்தெழுச்சி தொடர்...