தற்போதைய அரசியல் சூழலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தீர்வுக்காக பயன்படுத்த வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.

Sunday, October 28th, 2018

ஆட்சி மாற்றத்தை தமிழ் மக்கள் வெடி கொழுத்தி வரவேற்கின்றார்கள் என்றால், புதிய ஆட்சியிலாவது தமது பிரதான மற்றும் நாளாந்த பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்றும், புதிய ஆட்சியில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற அக்கறையுள்ளவர்களும், ஆற்றல் உள்ளவர்களும் பங்கெடுத்து தமக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பார்கள் என்றும் தமிழ் மக்கள் நம்புகின்றார்கள். மக்களின் நியாயமான நம்பிக்கையை நிறைவேற்றுகின்றவகையில் புதிய ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (27.10.2018) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு விஷேட உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கடந்த ஆட்சியை தாமே ஏற்படுத்தியதாகக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உட்பட பிரதான கோரிக்கைகள் பலவற்றைத் தீர்த்துவைப்பதாகக் கூறியபோதும், அவற்றைத் தீர்த்துவைக்கவில்லை.

தமிழ் மக்கள் தமது பிரச்சனைகளுக்கு தீர்வுகேட்டு வீதியில் இறங்கிப்போராடிக்கொண்டிருப்பதற்கு, போலித் தமிழ்த் தேசியம் பேசியவர்களான, தேர்தலில் வென்றவர்களும், தோற்றவர்களுமே பதில் கூறவேண்டும். என்று கூறிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,

கடந்த காலத்தில் கிடைக்கப்பெற்ற பல சந்தர்ப்பங்களை தவறவிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தற்போது தென் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழலையும் ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் தேவையுடன் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கையில், இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமது சுயலாப அரசியல் தேவைகளுக்காக இந்தச் சூழலை தவறவிட்டு மீண்டும் ஒரு தவறைச் செய்து, தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை மேலும் பின்னோக்கித் தள்ளாhமல், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சூழலை தமிழ் மக்களின் நலனிலிருந்தும், பிரதான பிரச்சனைகளுக்கு தீர்வைக்காணும் உண்மையான விருப்பத்துடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

2

1

3

4

Related posts:

எண்ணை ஆய்வுகளாலும் இராணுவ ஒத்திகைகளாலும் கரையோர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது - டக்ளஸ் எம்....
சொற்சிலம்பம் 2018 விவாத நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்...
முல்லைத்தீவில் ஈ.பி.டி.பி. யின் மாவட்ட விஷேட மாநாடு: பேரெழுச்சியுடன் ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரள்...

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நம்பியதால் நாம் நாதியற்று தவிக்கின்றோம் - வரணிப்பகுதி மக்கள் ஆதங்கம்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேசிய கிராமிய பொருளாதார அபிவிருத்திக் கூட்டம் வவுனியா மாவட்டச் ச...
முல்லை கடலில் அமைச்சர் டக்ளஸின் ஒழுங்குபடுத்தலில் கூட்டு நடவடிக்கை - பலர் கைது, படகுகளும் கைப்பற்றப்...