கிளிநொச்சி குளத்தை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!

Tuesday, August 10th, 2021

கிளிநொச்சி குளத்தினை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் பூநகரியில் இடம்பெற்றது.

அண்மையில் குறித்த திட்ட வரைபு, இரணைமடு நீர்பாசன பொறியியலாளர் செந்தில்குமரனால் வழங்கப்பட்ட நிலையில் சமூக மட்டத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

குறித்த அபிவிருத்தி தொடர்பாக இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அனுராதா ஜயரத்ன, இராஜாங்க அமைச்சர் அனுராத லங்கா ஜெயரட்ணவின் இணைப்பு செயலாளர் சுமுது, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைதலைவர் தவநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினர்.

குறித்த குளத்தினை சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி செய்து மக்களின் பொழுதுபோக்குத் தளமாக மாற்றுவதற்கும் மாவட்டத்திற்கு வருமானத்தை ஏற்படுத்தும் வகையிலும்கூடிய திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சலுகைகள் வேண்டாம்: எமது மக்களுக்கு வளங்களை மீள ஒப்படைத்தால் போதும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலி...
வடக்கு போக்குவரத்து சபைகளில் இடம்பெற்ற பதவி உயர்வு முறைகேடுகள் இன்னமும் உரியவாறு விசாரிக்கப்படவில்லை...
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்...

உள்ளுராட்சி மன்றங்கள் தரமுயர்ந்தது! எமது கோரிக்கை நிறைவேறியது!! வடக்கில் 3000பேருக்கு அரச வேலைவாப்பு...
நாட்டு மக்களின் நலன்கருதியும், தேசிய பாதுகாப்புக் கருதியும் உழைக்க முன்வாருங்கள் - நாடாளுமன்றில் டக்...
பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி மீளக் கட்டியெழுப்பப்படும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு செயல...