யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுக்கூட்டங்கள் வழமை போன்று மாவட்ட அதிகார சபைக்குட்பட்டே நிர்வகிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, April 16th, 2023

வடக்கு கிழக்கில் காணப்படும் தீவுகளில் நிர்வாகம் மற்றும் தீர்மானமெடுத்தல் யாருக்கு அமைய வேண்டும் என்பதிலே எனது எதிபார்ப்பு அமைந்துள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு பெரிய தீவுக்கூட்டங்கள் இருப்பினும் அவை வழமை போன்று மாவட்ட அதிகார சபைக்குட்பட்டே நிர்வகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் காணப்படும் நூற்றுக்கணக்கான தீவுகளுக்காக அமைச்சரவைப் பத்திரம் கொண்டுவரப்பட்டது.

அத்துடன் இவ் அபிவிருத்தி சபைகள் மூலம் அபிவிருத்தி முதலீடுகளை மட்டுமே மேற்காள்ள முடியும். எனவே அந்தந்த பகுதிக்குரிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும்.

இதுவரை இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இனி வருங்காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலையை  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  நேற்றையதினம் பார்வையிட்டார்.

இதன்போது இரணைமடு மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு அண்மையில் சீன நாட்டவருக்கு காணி வழங்கப்படவுள்ளதாக நிலவும் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ், தேவானந்தா –

குறித்த கருத்துக்களை தெரிவிக்கும் அரசியல்வாதிகள் பினாமி அரசியலை நடத்துபவர்களாகவும் சூனிய அரசியலை நடாத்துபவர்களாகவும் பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினைகளாக வைத்திருக்க விரும்பும் அரசியல்வாதிகளின் உளறல் மட்டுமே.

இவ்விடயம் தொடர்பில் எவ்வித உண்மைத் தன்மைகளும் இல்லை. இவர்கள் மக்களை குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களாகக் காணப்படுவதையே வரலாறும் காட்டி நிற்கின்றது என்றும்; தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


கடற்றொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் வடக்கு, கிழக்கில் அதிகம் தேவை! நாடாளுமன்ற உறுப்பினர் டக...
வடக்கில் கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாகத் தொழிலை மேற்கொள்ள வழிசமைத்துக் கொடுத்தவர்கள் நாம் - பாஷையூரில...
மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான துறைமுகத்தை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொட...