மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான துறைமுகத்தை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Thursday, January 11th, 2024

கொழும்பு மோதரயில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான துறைமுகத்தினை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின்போது அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மீன்பிடித்துறைமுக கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் மற்றும் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனிடையே – உள்ளூர் டின்மீன் (canfish) உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து  வட் வரி அதிகரிப்பைத் தொடர்ந்து தாம் எதிர்கொள்ளும் நடைமுறை சவால்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

உள்ளூரில் தயாரிக்கப்படும் டின் மீன்களுக்கு விலை அதிகரிப்பு செய்வது மற்றும் டின்மீன் இறக்குமதிகளால் தீர்மானிக்கப்படும் சந்தை விலை போன்ற விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இக் கலந்துரையாடலின்போது அமைச்சின் செயலாளர், கடற்றொழில் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் , உதவிச்செயலாளர் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

இறந்த உறவுகளை நினைவு கூரவும் நினைவுத் தூபி அமைப்பதற்கும் விரைவில் தனிநபர் பிரேரணை! - டக்ளஸ் தேவானந்த...
கடற்றொழிலாளர்களின் வாழ்வியலை பாதிக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
ஜே. வி. பி தொழிற்சங்கங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுடன் கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொட...