தமிழ் மொழியில் பாடசாலை கீதங்கள் அமைய வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Thursday, October 26th, 2023

மாணவர்கள் இலகுவாக புரிந்து கொண்டு பின்பற்றக்கூடிய வகையில் பாடசாலை கீதங்கள் மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மத்திய கல்லூரியின் கீதம் தமிழ் மொழிக்கு மாற்றப்படுவதுடன் ஏனைய தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ். மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறன் (ஸ்மார்ட்) வகுப்பறையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த கல்லூரியின் பழைய மாணவனான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி கற்ற காலத்தில் அர்த்தம் புரிந்து கொள்ளாமல் கல்லூரி கீதத்தினை மனனம் செய்து பாடியதாக தெரிவித்ததுடன், கீதத்தின் அர்த்தத்தினை புரிந்துகொள்ளுகின்ற போதே, உணர்வு ரீதியான பிணைப்பையும் அர்ப்பணிப்பு மனப்பக்குவத்தையும் மாணவர்கள் பெற்றுக் கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.

Related posts:

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
சவால்களை வெற்றி கொள்ள ஒன்றிணைந்து செயற்படுவோம் - புத்தாண்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப...
திரும்பத் திரும்ப கூறுவதால் பொய் உண்மையாகிவிடாது - விழிப்பாக இருக்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு அமைச்...

ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞையும் மக்கள் எமக்கு வழங்கப்போகும் ஆணையும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தி...
மக்களை அச்சுறுத்தும் கொறோனா வைரஸை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் உயர் மட்ட கூட்டம் – அமைச்சர் டக்ளஸ் ...
பொதுமக்களின் இயல்பு வாழ்விற்கு இடையுறாக இருக்கும் தடைகளை அகற்றும் வகையில் முடிவுகள் அமைய வேண்டும் ...