மக்களை அச்சுறுத்தும் கொறோனா வைரஸை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் உயர் மட்ட கூட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 20th, 2020

மக்களை அச்சுறுத்தும் கொறோனா வைரஸை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் துறைசார் தரப்பினரை அழைத்து உயர் மட்ட கூட்டமொன்றை கூட்டி ஆலோசனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று காலை (20) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில் –

சீன தேசத்தில் உருவானதாக கூறப்படும் இந்த கொரோனா வைரசானது இன்று உலகம் முழுவதையும் பாரதூரமாகத் தாக்கி பல ஆயிரம் உயிர்களை பலியெடுத்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது இலங்கையிலும் இந்நோய் இனங்காணப்பட்டுள்ளதுடன் அதனை தடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு நடைமுறைப்படுத்தி வருகின்றது.

ஆனாலும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வடபகுதியில் திருப்திகரமாக கடைப்பிடிக்கப் படாமைதயால் மக்கள் இன்னனும் ஒரு தெளிவற்ற நிலையில் இருக்கின்ற நிலை காணப்படுகின்றது.  இதனால் யாழ்ப்பாணத்தில் இந்நோய் பரலவினால் அதிக தாக்கம் ஏற்படம் வாய்ப்புள்ளதாக வைத்திய துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்ட மக்கள் இந்நோயின் தாக்கத்தை உணர்ந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதுடன் இந்நோயிலிருந்து மக்களை பாதுகாப்பாக வழிநடத்திச் செல்லும் பொறுப்பையும் மக்கள் ஏற்று இம்மாவட்ட மக்களை மட்டுமல்லாது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கப்பட வெண்டும்.

அத்துடன் அச்சுறுத்தும் கொறோனா வைரஸை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் உள்ள துறைசார் தரப்பினரை அழைத்து உயர் மட்ட கூட்டமொன்றை நடத்தவுள்ளேன் என தெரிவித்த அமைச்சர் இந்நோயிலிருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பது அதில் உள்ள சவால்கள் நடைமுறை சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்களையும்  விரிவாக ஆராயவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் முழுமையான விபரங்களை பார்வையிட கீடுள்ள இணைப்பை அழுத்தவும்….

Related posts: