பொதுமக்களின் இயல்பு வாழ்விற்கு இடையுறாக இருக்கும் தடைகளை அகற்றும் வகையில் முடிவுகள் அமைய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, March 29th, 2024

பொதுமக்களின் இயல்பு வாழ்விற்கு இடையுறாக இருக்கும் தடைகளை அகற்றும்  வகையில் முடிவுகள் அமைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் செயற்பாடுகளால்  பொதுமக்களின் இயல்பு வாழ்விற்கு இடையுறாக இருக்கும் தடைகளை அகற்ற வேண்டிய ஏதுநிலைகளை ஆராய்ந்து முடிவுகள் அமைய வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வன ஜூவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பு துறைசார் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்பதாக வடமராட்சி கிழக்கில்  பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட காணிகள் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த காணிகளுக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாதுள்ள நிலையை கருத்தில் கொண்டு அவ்வாறான இடையுறுகளை அகற்றுவது தொடர்பில்  ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:


வழங்கப்படும் திட்டங்களை சரியாக கையாண்டு நீர்வள தொழில்சார் குடும்பங்கள் பயனடைய வேண்டும். - அமைச்சர...
சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் - சமுர்த்தி பயனாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
மாடுகள் திருட்டு அதிகரிப்பு - கால் நடை வளர்ப்போர் அமைச்சர் டக்ளசிடம் முறையீடு - கட்டுப்படுத்துவதாக ப...