யாழ்ப்பாணத்தில் “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 7th, 2020

வீட்டுப் பொருளாதாரம், போசனையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டும் தேசிய வீட்டுத் தோட்ட செயற்றிட்டத்தின் அடிப்படையில் மரக் கன்றுகளை வழங்கும் சுபீட்சத்தின் நோக்கு திட்ட நிகழ்வை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சமுர்த்தி வங்கியில் ஆரம்பித்து வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வு இன்றையதினம் பிற்பகல் 4.00 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகர் சுதர்சன் தலைமையில் இடம்பெற்றது.

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தை நாடு முழுவதும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்றையதினம் யாழ் மாவட்டத்தில் குறித்த முதலாவது நிகழ்வை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வை ஆரம்பித்துவைத்தபின் கருத்து தெரிவித்த அமைச்சர் மிகச் சிறிய அளவில் சய தேவைப்பூர்த்தி. வீட்டுச் செலவுகளை குறைத்தல்,சேமிப்பு தூண்டலுக்கான வாய்ப்ப, நஞ்சற்ற காய்கறி பழங்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு என்பவற்றின் பொருட்டு நாற்றுக்கள் விதைகள் பழமரக் கன்றுகள் என்பன வழங்கப்பட ஏற்பாடுகள் உள்ளன.

தேசிய ரீதியான இந்த திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் இந்நிகழ்வை ஆரம்பித்து வைப்பதில் மிகிழ்வடைகின்றேன். அத்துடன் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகள்தோறும் 210 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின்மூலம் அவர்கள் சிறந்த பயன்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட பணிப்பாளர் தி. விஸ்வரூபன், சிரேஸ்ட சமுர்த்தி ஆணையாளர் ஆ.இரகுநாதன், வங்கி முகாமையாளர் சி. பிரதீபன் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே யாழ். நகர பழக்கடை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பழக்கடை வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன் அவற்றுக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


எமது மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தீர்த்து மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கு முன்வாருங்...
குறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க மு...
மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுடன் அமைச...