எமது மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தீர்த்து மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கு முன்வாருங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. அழைப்பு!

Thursday, May 10th, 2018

அதிகாரப் பகிர்விற்கென்றே ஆரம்பிக்கப்பட்டது மாகாண சபை முறைமை என்பதை  ஆளுந் தரப்பினரும், எதிர்த் தரப்பினரும், ஆளுநர்களும், மாகாண சபையில் அமர்நதிருக்கின்ற முதலமைச்சர்கள் உட்பட்ட ஏனைய உறுப்பினர்களும் புரிந்து கொள்ள வேண்டும் – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிதுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கொள்கை விளக்க உரை பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

அந்த வகையில், கௌரவ ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டதைப் போன்று, வடக்கு, கிழக்கு மக்கள் பொறுமை இழந்துதான் இருக்கின்றனர். அவர்களை நிரந்தரமாக சமரசப்படுத்துவதற்கு அரசியல் வேலைத் திட்டம் அவசியமாகும். அதற்கு தற்போதைய நிலையில் மாகாண சபை முறைமையை முழுமையாக செயற்படுத்தி, எமது மக்களின் அடிப்படை, வாழ்வாதார மற்றும் அரசியல் ரீதியலான பிரச்சினைகளைத் தீரப்பதற்கு தற்போது நடைமுறையில் இருக்கின்ற வேலைத் திட்டங்களுக்கு மேலதிகமாக விஷேட திட்டங்களை வகுத்து நடைமுறைப் படுத்துவதற்கும், அதேபோன்று எமது மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டு, எமது மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கு முன்வாருங்கள் எனக் கேட்டுக் கொள்கின்றேன்  – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


குடும்பத்தைப்போல் சமூகத்தையும் கரிசனையுடன் வழிநடத்தக்கூடியவர்கள் பெண்களே - மகளிர்தின செய்தியில் செயல...
நோயாளிகளைப் பார்க்க வருகின்றவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு யாழ் போதனா வைத்தியசாலை தள்ளப்பட்டு...
மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுடன் அமைச...