மொத்த விற்பனை அதிகரிப்பு – பேலியகொட மத்திய மீன் சந்தையில் 40 வியாபார நிலையங்களை உள்ளடக்கிய தொகுதியை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, December 20th, 2021

பேலியகொட மத்திய மீன் சந்தையில் புதிதாக மொத்த விற்பனை தொகுதி ஒன்றை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று ஆரம்பித்து வைத்தார். 

முன்பதாக பேலியகொட மீன் சந்தையில் மொத்த விற்பனை தொகுதிகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தினை சந்தை நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில், புதிதாக 40 வியாபார நிலையங்களை உள்ளடக்கிய தொகுதியை கடற்றொழில் அமைச்சர் ஆரம்பித்து வைத்துள்ளர்

இதேவேளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றதனர் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக பேலியகொட மீன் சந்தையில் மொத்த விற்பனை அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக சுமார் 40 கடைகளை உள்ளடக்கிய மொத்த விற்பனை தொகுதி இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.-

இதனிடையே

லுணுவிலவில் அமைந்துள்ள வடகடல் நிறுவனத்தின் வலை உற்பத்தி தொழிற்சாலையை மேலும் வினைத்திறன் மிக்கதாக செயற்படுத்துவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த தொழிற்சாலையின் தொழிறசங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து இரத்நாயக்காவும் கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை

கடற்றொழில் அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகின்ற போது இவ்வருடம் மீன் ஏற்றுமதி அதிகரித்திருக்கின்றமை தொடர்பாகவும்,  இவ்வதிகரிப்பை மேலும் முன்கொண்டு செல்வது தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: