முஸ்லீம் மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் என்ன செய்தார்? புத்தளம் ‘தேவா பாத்’ சான்று பகரும் என்கிறார் யாழ். நவ்ஷாத்!

Sunday, July 19th, 2020



வெற்றுக் கையோடு துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்ன செய்தார் என்பதற்கு சான்றாக ‘தேவா பாத்’ என்ற குடியேற்றம் இன்றும் புத்தளத்தில் தலைநிமிர்ந்து நிற்கின்றது என்று தெரிவித்துள்ள யாழ். முஸ்லீம் மக்கள் பிரதிநிதி நவ்ஷாத் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தின் முன்மாதிரி கிராமமாக விளங்கும் கிளி.நாச்சிக்குடா பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மககள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

புத்தளத்தில் தவித்திருந்த முஸ்லீம் மக்களுக்கு குடியேற்றங்களை மேற்கொண்டது மாத்திரமல்ல, முஸ்லீம்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக புத்தளத்தில் தமது காரியாலயம் ஒன்றை அமைத்து தன்னுடைய முழு நேரக் கண்காணிப்பில் எம்மை
வைத்திருந்தவர். அதற்காக தோழர் பவான் என்பவரின் உயிரையே தியாகம் செய்தது ஈ.பி.டி.பி. என்பதை முஸ்லீம் மக்கள் மறக்கவில்லை.

ஆகவே, யாழ்ப்பாண முஸ்லீம் சமூகம் ஏற்கனவே வீணைச் சின்னத்திற்கு வாக்களிக்க தீர்மானித்துள்ள நிலையில் நாச்சிக்குடா மக்களும் வீணைக்கு வாக்களித்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அபிவிருத்தி புரட்சியில் முஸ்லீம் மக்களும் பங்காளர்களாக இணைந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts:

இலங்கையின் கடன் நிலை எதிர்மறையான பேறுபேற்றைக்கொண்டுளது  - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்ட...
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவருகின்றது கேபிள் டி.வி. உரிமையாளர்களின் அத்துமீறல்கள் – நாடாளுமன்றில் டக்...
டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசி நிலங்களை விடுவித்தேன்: எஞ்சிய நிலங்களையும் விடுவிப்பேன் - யாழ்ப்பாணத்தி...

சிறந்த ஆரம்பமே ஆரோக்கியமான பலாபலனை தரும் - அதற்கான இலக்கை அடைய உறுதியுடன் பயணியுங்கள் – கட்சியின் வே...
நான் கடற்றொழில் அமைச்சரானதன் பின்னர் கடற்றொழிலாளர் பிரச்சினைகள் குறித்து அக்கறை காட்டி வருபவன் அல்ல ...
பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள மக்களின் எஞ்சியுள்ள காணி நிலங்களும் அடுத்த சில மாதங்களுக்குள் விடுவிக்க...