யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவருகின்றது கேபிள் டி.வி. உரிமையாளர்களின் அத்துமீறல்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, March 18th, 2019

யாழ்ப்பாணத்தில் தற்போது கேபிள் டி.வி. கம்பங்களை சட்டவிரோதமான முறையில் நடுகின்ற ஒரு செயற்பாடு இரண்டு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கிடையில் போட்டி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகத் தெரிய வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு, தொலைத் தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியன தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;       

இந்த தனியார் தொலைக்காட்சிகளின் கேபிள் வயர்கள் கடந்த காலங்களில் மின் கம்பங்கள் ஊடாக இழுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த கேபிள்களில் பழுதுபார்த்தல்களை மேற்கொண்டிருந்த பலர் மின்சாரம் தாக்கிக் கொல்லப்பட்டதன் காரணமாக அந்த கேபிள்கள் மின்கம்பங்களில் இருந்து அகற்றப்பட்டதன் பின்னர் தற்போது உள்ளூராட்சி நிறுவனங்களின் அனுமதியைப் பெறாமலும், நீதி மன்றம் தடைவிதித்துள்ள நிலையிலும், பொலிஸாரையும் சட்டை செய்யாது, இத்தகைய கம்பங்கள் யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு போன்ற பகுதிகளில் பாதையோரங்களில் கொங்கிறீட் இடப்பட்டு நடப்பட்டு வருவதாகவும், இது பற்றி கேள்வி எழுப்புகின்ற ஊடகவியலாளர்கள் உட்பட அரச அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

எனவே, இப்பிரச்சினை தொடர்பில் தொலைத் தொடர்புகள் அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related posts:

கையாலாகாதவர்களால் முடங்கிக் கிடக்கிறது யாழ் நகரத்தின் அபிவிருத்தி  - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சு...
காணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் - பளை செல்வபுரம் மக்களிடம் டக்ளஸ் எம்.பி தெ...
சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்க...