சிறந்த ஆரம்பமே ஆரோக்கியமான பலாபலனை தரும் – அதற்கான இலக்கை அடைய உறுதியுடன் பயணியுங்கள் – கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, February 8th, 2021

சிறந்த ஆரம்பமே ஆரோக்கியமான பலாபலனை தரும். அதற்கான இலக்கைடைய ஒற்றுமையுடன் பயணிப்பதே சிறந்தது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா எமது கட்சியின் மக்கள் பணிக்கான செயற்பாடுகளை புதிய பரிமாணத்துடன் உத்வேகமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வேலணை பிரதேச உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்னு

வேலணை பிரதேச சபையானது எமது கட்சியின் ஆளுகைக்குள் உள்ளது. இதனால் இப்பகுதியில் எமது கட்சியாலும் அமைச்சினூடாகவும் முன்னெடுக்கப்படும் மக்களுக்கான அபிவிருத்திகளையும் வாழ்வாதார கட்டுமாணப் பணிகளையும் தடைகளின்றி செய்துகொடுக்க கூடிய சூழல் காணப்படுகின்றது.

அந்தவகையில் இப்பிரதேசத்தினது அபிவிருத்தியை கருதி பல்வேறு நலத்திட்டங்கள் தற்போது நரைடமுறைப்படுத்தவதற்கான முயற்சிகள் முன்னெடக்கப்பட்டவரும் அதே வளை அதற்கான சாதக பாதக நிலைமைகளை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகளை பிரதேச சபையும் முன்னெப்பது அவசியமாகும்

குறிப்பாக கடற்றொழில் சார்ந்த பல்வேறு அபிவிருத்திகள் இப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அத்தொழிலை நம்பிவாழும் பல குடும்பங்களுக்கு மட்டுமல்லாது ஏனைய பலருக்கும் தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும் ஏதுநிலை காணப்படுகின்றது.

அதேபோல இன்னும் பல அமைச்சுக்கள் ஊடக இப்பகுதிக்கு பல திட்டங்கள் நமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் மக்களின் அடிப்படை தேவைகளான வீட்டுத்திட்டங்கள் மற்றும் மலசல கூடங்கள் வீடு புனரமைப்புக்கான நிதி உதவி, தொழில் வாய்ப்பு உள்ளிட்ட பல தேவைப்பாடுகளை தீர்ப்பதற்கான முயற்சிகளும் விரைவாக முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நடைமுறை சாத்தியமான வழிமுறைகளை இதயசுத்தியுடன் செயற்படுத்த முன்வாருங்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
இலஞ்சம் ஊழல் எழுதப்படாத சட்டமாகவே இருக்கின்றது - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்...
தொடர்ந்தும் ‘இன்று போய் நாளை வா’ எனக் கூறிக் கொண்டிருக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!