நடந்தவை நடந்ததாகே இருக்கட்டும். நடக்கப் போவது நல்லதாக அமையட்டும்- முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, February 26th, 2021

நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும் நடக்கப் போவது நல்லதாக அமையட்டும் என்று முல்லைத்தீவில் கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் இன்று (26.02.2021) பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்ட போதே இதனைத் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் – கடந்த காலங்களில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்யாமையின் காரணமாகவே மக்களின் பிரச்சினைகள் தீராப் பிரச்சினைகளாக தொடர்ந்து வருவதாக  தெரிவித்ததுடன் கடந்த காலத் தேர்தல்களில் போதிய மக்கள் ஆதரவு கிடைக்காமையினால்மக்கள் எதிர்கொள்ளுகின்ற சில பிரச்சினைகள் தொடர்பாக வலுவாகக் குரல் கொடுக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், மக்கள் எதிர்காலத்தில் சரியான வழிமுறையை தெரிவு செய்வார்களாயின் நடக்கப் போகின்றவை சிறப்பானதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நியமனம் உறுதிப்படுத்தப்படாத தொண்டர் ஆசிரியர்களுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடி பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கஜேந்திரன்குமார் குண்டர்களையும், வாள் வெட்டுக்குழுவையும்  நம்பி அரசியல் செய்கின்றார். ஈ.பி.டி.பி குற...
வடக்கு – கிழக்கில் ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கான தலைவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்?...
அந்தமான் தீவில் சிக்கியுள்ள மீனவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர ஏற்பாடு - துரிதப்படுத்துமாறு து...