மின் கட்டணப் பட்டியல நீண்ட காலமாகக் கிடைத்திராத மக்களது பாக்கித் தொகைகளை மீளச் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.!

Tuesday, December 5th, 2017

மின் கட்டணப் பட்டியல் நீண்ட காலமாகக் கிடைத்திராத மக்களது பாக்கித் தொகைகளை அம் மக்கள் மீளச் செலுத்துவதற்கு அவர்களுக்கு ஒரு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதாவது, மின் கட்டணம் எத்தனை மாதங்களுக்கு தாமதமாக வழங்கப்பட்டதோ, அத்தனை மாத கால அவகாசத்தில் அந்தப் பாக்கித் தொகையை தவணை அடிப்படையில் மீள அறவி;ட்டால் மாத்திரமே எமது மக்களால் அதனை ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மின்வலு புதுப்பிக்கத்தக்க சக்தி பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி கடந்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அபிவிருத்தி ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

அதே நேரம் இனியும் இத்தகைய நிலை ஏற்படாத வகையில் அந்தந்த மாதங்களுக்கான மின் கட்டணப் பட்டியல்கைள பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக உரிய வகையில் அதற்கான ஆளணிகளை நியமிக்குமாறும் மேலும் தற்போது வடக்கு மாகாணத்தில் இலங்கை மின்சார சபையினைப் பொறுத்தமட்டில் சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்களும் காணப்படுவதாகக் கூறப்படுகின்ற நிலையில் அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கும் கௌரவ அமைச்சர் அவர்கள் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-10 copy

Related posts:

கூட்டமைப்பின் ஏமாற்றுவித்தை மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவருகின்றது - டக்ளஸ் தேவானந்தா
எங்களின் இரத்தம் சிந்தியபோது தமிழக மக்களின் இரத்தம் கொதித்ததை நான் மறக்கவில்லை - அமைச்சர் டக்ளஸ் தேவ...
யாழ்ப்பாணம் பிரதேச கடற்பரப்புகளில் சிறு தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களது இடர்பாடுகளுக்...

இரணைமடுக் குளத்தினை மேலும் விஸ்தரிப்பதற்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி - கிளிநொச்சியில் அம...
அமைச்சர் டக்ளஸின் மற்றுமொரு கனவும் நனவானது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்ச...
தமிழ் அரசியல் ஒட்டுண்ணிகள் இன்னுமொரு வரலாற்று தவறை செய்யக் கூடாது. - அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!