இரணைமடுக் குளத்தினை மேலும் விஸ்தரிப்பதற்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Monday, December 30th, 2019


இரணைமடு குளத்தினூடாக மேலும் பெருமளவு மக்கள் பலனடையும் வகையில் அதனை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்கான நிதியினை அடுத்த வரவு செலவு திட்டத்தில் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இரணைமடு பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மாச்சி உணவகத்தை நேற்று (29.12.2019) திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

இரணைமடு குளத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கின்ற நீரை சேமித்து கிளிநொச்சி உட்பட நீர் தேவையான மாவட்டங்களுக்கு பயன்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், குறித்த திட்டத்தினால் எந்தவொரு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் சுட்டிக் காட்டிய அமைச்சர் அவர்கள், இரணைமடு அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு எடுத்துக்கூறி அடுத்த வரவு செலவு திட்டத்தில் அதற்கான நிதியை பெற்றுக் கொள்ள  எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்

அதேவேளை, இரணைமடு நன்னீர் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினரின் வேண்டுகோளை ஏற்று கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், குறித்த பிரதேச மக்களும் இரணைமடு நன்னீர் மீனவர் சங்கப் பிரதிநிதிகளும் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்போது, கருத்து தெரிவித்த நன்னீர் மீனவர் சங்கப் பிரதிநிதிகள், வருடந்தோறும் இரணைதீவு குளத்தில விடப்படுகின்ற மீன் குஞ்சுகளின் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் எனவும்; வருட ஆரம்பத்திலேயே அவை குளத்தில் விடுபடுமானால் அதிகளவான மீன் அறுவடையை தங்களால் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவதானம் செலுத்திய கௌரவ அமைச்சர் அவரகள், குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அத்தோடு மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தும் வகையிலான இயந்திரப் படகு ஒன்றையும் பெற்றுத்தருமாறு மீனவர் சங்கப் பிரதிநிதிகளினால் வேண்டுகோள்; முன்வைக்கபட்ட நிலையில், முடிந்தளவு விரைவில் அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கில் கிராம சேவை யாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடன் நடவடிக்கை எடுக்கவும்! நாடாளுமன்ற உறுப்ப...
நீதிக்காக காத்திருக்கும் சூழலிலேயே தமிழ் மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் - டக்ளஸ் எம்....
நந்திக்கடல் பிரதேசத்தை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்வாதார பாதிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்...

கல்விக் கொள்கையில் மாற்றாந்தாய் மனப்பான்மை இருக்கின்ற போது சமச்சீரான சமூகத்தை எவ்வாறு உருவாக்கப் முட...
சமூக வலைத்தளங்கள் மக்களுக்கு சரியான கருத்துக்களை எடுத்துச் செல்ல வேண்டும் - செயலாளர் நாயகம் சுட்டிக்...
தொல்பொருள் திணைக்களத்தின் தொல்லைக்கு கூட தீர்வு காணமுடியாதவர் எப்படி நிரந்தர தீர்வை பெற்றுத் தருவார்...