யாழ்ப்பாணம் பிரதேச கடற்பரப்புகளில் சிறு தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களது இடர்பாடுகளுக்கு தீர்க்க நடவடிக்கை!

Saturday, April 6th, 2024

………………..

யாழ்ப்பாணம் பிரதேச கடற்பரப்புகளில் வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக அதிகமாக முன்னெடுக்கப்படும் கடலட்டை பண்ணைகளால் சிறுதொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் .ஏற்படும் சில இடர்பாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சிறுதொழில் கடற்றொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக யாழ்ப்பாணம் பிரதே கடல்றொழில் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக அதிகமான கடலட்டை பண்ணைகள் அதிகளவில் உருவாக்கப்பட்டு வருகின்ன.

இந்நிலையில், சிறு கடற்தொழிலில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள்  தொழில் ரீதியில் சில பாதிப்புக்களை எதிர்கொள்வதாக சங்கங்களிடம் முனையிட்டதை தொடர்ந்து இது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்  கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் சிறுதொழிலார்களின் கருத்துக்களை அவதானத்தில் கொண்ட அமைச்சர் குறித்த கடலட்டை பண்ணைகளின் அறுவடை முடிந்தபின் துறைசார் அதிகாரிகளுடாக குறித்த இடங்களின் அமைவிடம் மற்றும் அளவீடுகளை மேற்கொண்டு அவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்தும் பண்ணைளின் இடவமைவுகளை மாற்றியமைத்து குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வை வழஙகுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: