எங்களின் இரத்தம் சிந்தியபோது தமிழக மக்களின் இரத்தம் கொதித்ததை நான் மறக்கவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, December 13th, 2020

எங்களின் இரத்தம் சிந்தியபோது தமிழக மக்களின் இரத்தம் கொதித்ததை நான் மறக்கவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இங்கே இரத்தம் சிந்தியபோது அங்கே இரத்தம் கொதித்தவர்கள் என்று தமிழக மக்களை விளிக்கின்றீர்கள். ஆனால் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த போது மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் கொந்தளிக்கவில்லை என்ற விமர்சனம் இருக்கின்றது தானே..? என வீரகேசரி வார வெளியீட்டிற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய சிறப்பு நேர்காணன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

அவ்வாறான சூழ்நிலையை எற்படுத்தியது புலித் தலைமையின் தவறான சுயநலச் தீர்மானங்களே தவிர தமிழக மக்கள் அல்ல. அவர்கள் உணர்வு ரீதியாக எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு நெருக்கமானவர்களாகவே இருக்கின்றனர்.

அத்துடன் உங்களைப் போன்று பலரும் இதனை வாதப் பொருளாக முன்வைப்பதை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அவதானித்திருக்கின்றேன். உங்கள் எல்லோரையும்விட என்னால் பிரபாகரனின் மனவோட்டங்களை அறிந்து கொள்ள முடியும். அதனாலேயே இன்று உங்கள் முன்னால் இருந்து கதைத்துக் கொண்டிருக்கின்றேன்.

தனது குடும்பதினர் புலம்பெயர் நாடுகளில் இருப்பதைவிட தனக்கு அருகில் இருப்பதுதான்  பாதுகாப்பானது என்பதே பிரபாகரனின் எண்ணமாக இருந்தது. தன்னுடைய சாம்ராஜ்ஜியம் மக்களையும் அழித்து தன்னையும் அழிக்கப் போகின்றது என்று பிரபாகரன் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதனால் பிரபாகரனினால் தனது குடும்பத்தினருக்கு அனைத்து வசதிகளும் கொண்ட வாழ்கை முறை வன்னியிலேயே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

அதேபோன்று மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனியை தனக்கு பின்னரான தலைமை பொறுப்புக்கு கொண்டு வரும் முயற்சியாக கணனிப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு அது வலுப்படுத்தப்பட்டதே தவிர மகனை யுத்த முனைக்கு அனுப்பும் எண்ணம் பிரபாகரனுக்கு இருக்கவில்லை. பிரபாகரனின் இந்த தீர்மானத்தினை சூசை போன்றவர்கள் வெளிப்படையாக விமர்சித்;ததாக தகவல்கள் இருக்கின்றன. ஆனால் அவர்களின் துரதிஸ்டம் இறுதியில் சார்ள்ஸ் அன்ரனியை தேடி யுத்தமுனை நகர்ந்து விட்டது.

உங்களுக்கு தெரியாது என்று நினைக்கின்றேன் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்துடனான மோதல் ஏற்பட்டு புலிகளுக்கு நெருக்கடி ஏற்பட்ட போது பிரபாகரன் முதலில் செய்த வேலை தன்னுடைய மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் ஐரோப்;பிய நாடான டென்மார்கிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்ததுதான். பின்னர் பிரேமதாஸ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது பேச்சுவார்த்தைக்காக இலண்டனில் இருந்து வந்த அன்ரன் பாலசிங்கத்துடன் நாட்டிற்கு வந்திருந்தனர்.

அதன் பின்னர் கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக படையினர் மேற்கொண்ட சத்ஜெய இராணுவ நடவடிக்கை காரணமாக வன்னியில் கடுமையான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியில்தான் பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலசந்திரன் பிறந்திருந்தார்.

எனினும் இறுதியிலும் தன்னுடைய சாம்ராஜ்ஜயம் சிதறப் போகின்றது என்பதை பிரபாகரன் முன்கூட்டியே உணர்ந்திருந்தால் இப்போது இந்தக் கேள்விக்கு விடையளிக்க வேண்டிய தேவை எனக்கு இருந்திருக்காது என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கின் வறிய குடும்பங்களும் மின்சார ஒளி பெற விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - நாடாளுமன்றில்...
நல்லாட்சி வழங்கிய தொழில் வாய்ப்புக்களை நம்பியதால் நடுவீதியில் நிற்கின்றோம் - பாதிக்கப்பட்டவர்கள் அமை...
முற்கொம்பன் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு!