எதிர்கால சந்ததி ஒளிமயமாக வாழவேண்டும் என்பதற்காகவே கரடு முரடான பாதைகளைக் கடந்து உழைத்து வருகின்றேன் – சாவகச்சேரியில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Monday, October 15th, 2018

நான் ஒரு தனிப்பட்ட பகுதிக்கோ தனிப்பட்ட பிரதேசத்திற்கு உரியவன் அல்ல. தமிழ் மக்களது விடுதலைக்காக ஆரம்பகால போராட்டத்தில் ஈடுபட்டு தொடர்ந்தும் அந்த மக்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டுக்கொண்டிருப்பவன் நான். அந்த வகையில் எமது எதிர்கால சந்ததி ஒளிமயமானதாக வாழவேண்டும் என்பதற்காகவே கரடு முரடான பாதைகளைக் கடந்து தொடர்ந்தும் அயராது உழைத்து வருகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற டிறிபேக் தாரகை விளையாட்டுக் கழகம் நடத்திய மென்பந்துச் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்  –

இந்தக் கழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நீங்கள் கோரிக்கைகளாக என்னிடத்தே தெரிவித்துள்ளீர்கள். நிச்சயமாக நான் அவற்றை முடியுமான அளவில் நிறைவேற்றித் தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக ஆரம்ப நிகழ்வுகளைத் அடுத்து இரு அணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை தொடர்ந்து போட்டியை பிரதம விருந்தினர் டக்ளஸ் தேவானந்தா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன், சாவகச்சேரி நகர முதல்வர், கட்சியின் பிரதேச நிர்வாக செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/epdpnewsSL/videos/519952895082085/

 

Related posts: