மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை கடற்றொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.
‘மில்டன் மோட்டர்ஸ்’ எனும் பெயரில் தனியார் தொழில் முயற்சியாளர் ஒருவரினால் வடிவமைக்கப்பட்டுள்ள, குறித்த மின்கல படகு இயந்திரங்களின் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், அதனை சந்தைப்படுத்துவதற்கான அனுமதிகள் மற்றும் விலை நிர்ணயங்கள் தொடர்பாக, குறித்த தொழில் முயற்சியாளருடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடினார்.
இதன்போது, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த ஆகியோர் கலந்து கொண்டனர். – 25.01.2023
Related posts:
காணிகள் விடுவிப்பு - எழுத்தளவில் - பேச்சளவில் மாத்திரம் இருப்பதில் பயனில்லை! எமது மக்கள் குடியேற ஏ...
கூட்டமைப்பினர் எம்மை நட்டாற்றில் விட்டுள்ளனர் - கரவெட்டி பகுதி மக்கள் ஆதங்கம்!
அனர்த்த முகாமைத்துவ அரச நிதியை நிவாரணமாக வழங்க தீர்மானம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
|
|